[X] Close

ஆஸியுன் பயிற்சி ஆட்டம்: கடைசி நாளில் சதம் அடித்த முரளி விஜய், ராகுலின் நம்பிக்கை முயற்சி


australian-team-batting

முரளிவிஜய் பவுண்டரிக்கு பந்தை விரட்டிய காட்சி : படம் உதவி ட்விட்டர்

  • kamadenu
  • Posted: 01 Dec, 2018 14:06 pm
  • அ+ அ-

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் கடைசி நாளான இன்று இந்திய அணி வீரர் முரளி விஜய் அசத்தலாக சதம் அடித்தார், துணையாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து நம்பிக்கையூட்டினார்.

பிரித்வி ஷா காயத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தொடக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் வகையில், ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் இந்திய அணி 4 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.

முதல் நாள் மழையால் ரத்துசெய்யப்பட்ட நிலையில், 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய லெவென் அணி நேற்றைய 3-ம்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 356ரன்கள் சேர்த்தது.

கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. நீல்சன், ஹார்டே களத்தில் இருந்தனர். இந்திய அணியின் சொத்தையான பந்துவீச்சை அனாயாசமாக எதிர்கொண்டு ஆடிய நீல்சன் பயிற்சிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணிக்கு எதிராகச் சதம் அடித்தார். நீல்சன் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹார்டே 86 ரன்களில் வெளியேறினார்.

இன்றைய ஆட்டத்தில், கூடுதலாக 188 ரன்கள் சேர்த்து 544ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியைக் காட்டிலும் கூடுதலாக 188 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணித் தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இந்திய அணியில் 10 வீரர்கள் பந்து வீசினார்கள். ஆனால், ஆஸ்திரேலிய லெவன் அணியினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துவீச்சு அமையாததன் விளைவுதான் அந்த அணியை 544ரன்கள் சேர்க்க முடிந்தது. குறிப்பாக உமேஷ் யாதவ், முகமது ஷமி இருவரும் அதிகமான ரன்களைக் கொடுத்தனர். அனுபவம் இல்லாத வீரர்களிடம் 40 ஓவர்கள் வீசி 122 ரன்கள் வரை அஸ்வின் விட்டுக்கொடுத்ததும் கேள்விக்குரியதாகும்.

உணவு இடைவேளைக்குப்பின் முரளிவிஜய், கே.எல்.ராகுல் களமிறங்கினார்கள். பிரித்வி ஷா காயத்தால் விளையாட முடியாத சூழலில் முரளி விஜயன் களமிறங்கினார். கடந்த இங்கிலாந்து தொடருக்கு பின் அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய் மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் இல்லை. இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் சிறப்பாக ஆடியதால், மீண்டும் ஆஸ்திரேலியத் தொடருக்கு அழைக்கப்பட்டார்.

இன்றைய ஆட்டத்தில் முரளிவிஜய், ராகுல் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக முரளிவிஜய் தன்மீதான விமர்சனங்களை உடைக்கும் விதத்தில் பேட் செய்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 109 ரன்கள் சேர்த்தனர். கே.எல்.ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்துவந்த ஹனுமா விஹாரி, முரளி விஜய்க்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதிரடியாக பேட்ச செய்த முரளிவிஜய், 132 பந்துகளில் 129 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள் 16 பவுண்டரிகள் அடங்கும். விஹாரி 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய அணி கடைசி நாளில் 43.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close