[X] Close
 

மெஸ்ஸி இல்லை சுறுசுறுப்பும் இல்லை: மந்தமான ஆட்டத்தில் இத்தாலியை வென்றது அர்ஜென்டீனா


messi-match-argentina-football-football-friendly-match

மெஸ்ஸி படத்தை கையிலேந்தியிருக்கும் இளம் ரசிகர்

  • முத்துக்குமார்
  • Posted: 24 Mar, 2018 15:34 pm
  • அ+ அ-

மான்செஸ்டர் எதிஹாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற கால்பந்து ஃபிரெண்ட்லியில் இத்தாலியை மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

லியோனல் மெஸ்ஸி ஸ்டேடியத்திலிருந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார், இன்னொரு நட்சத்திர வீரர் சார்ஜியோ அகூயெரோவும் போட்டியை ஸ்டேடியத்திலிருந்து பார்த்து ரசித்தார்.

மொத்தத்தில் மந்தமாக நடந்த இந்த ஆட்டத்தில் 75 மற்றும் 85வது நிமிடத்தில் அர்ஜென்டீனா வீரர்கள் எவர் பனேகா, மனுயெல் லான்ஸீனி ஆகியோர் கோல்களை அடிக்கவில்லையெனில் அறுவையான ஒரு ஆட்டமாக இது அமைந்திருக்கும். 

கால்பந்தாட்டம் இடைவேளைக்குப் பிறகுதான் உயிர்பெற்றது. இரு அணிகளுமே அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. 

இத்தாலி உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெறவில்லை, இதனால் உத்வேகம் இல்லை, சுறுசுறுப்பும் இல்லை, 40வயது கோல் கீப்பர் கியான்லுய்கி பஃபான் சிறப்பாக ஆடினார், இந்த வயதிலும் அவருடைய உத்வேகம் குறையவில்லை. மெஸ்ஸிக்கு பதிலாக தடுப்பாட்ட வீரர் நிகலஸ் ஆட்டாமென்டி தேர்வு செய்யப்பட்டிருந்தார், வில்லி கபலெரோ அர்ஜென்டீனா கோல் கீப்பராக அறிமுகமானார். 

176வது போட்டியில் ஆடும் இத்தாலி கோல் கீப்பர் கையில் அடித்தார் ஆட்டாமெண்டி, தலையால் முட்டியது பஃபான் கைக்குச் சென்றது. ஆஞ்ஜெல் டி மரியாவும் நேராக கையில் அடித்தார், ஓரளவுக்கு சுறுசுறுப்பாகத் தொடங்கிய ஆட்டம் பிற்பாடு களையிழந்தது. முதல் பாதியில் இந்த வாய்ப்புகளுக்குப் பிறகு ஆட்டம் மெதுவே மந்தமாக நகர்ந்தது. இடைவேளைக்கு முன்பாக லியாண்ட்ரோ பாரிடிஸ், நிகலஸ் டாக்லியாஃபிகோ, கொன்சாலோ ஹிகுவெய்ன் கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் 40 வயது பஃபான் தன்னைத் தாண்டி செல்ல வாய்ப்பில்லை என்று டாக்லியாஃபிகோ, ஹிகுவெய்ன் ஷாட்களைத் தடுத்தார். 

இடைவேளக்குப் பிறகு மந்தமான இத்தாலிக்கு லோரென்சோ இன்சிக்னா கோல் அளித்திருப்பார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஷாட் வெளியில் சென்றது. ஆனால் அர்ஜென்டீனாவுக்கு லான்ஸீனி  அருமையான ஒரு கோலை 85வது நிமிடத்தில் அடித்தது சந்தர்ப்பவசமாக வெற்றிக்கான கோலாக அமைந்தது.

ஆட்டத்தின் மந்தத்தன்மையை போக்க ரசிகர்கள் மெக்சிகன் அலையை உருவாக்கினர். மெஸ்ஸி வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

அர்ஜென்டீனாவுக்காக முதல் கோலை பனேகா அடிக்கும் முன்னர் இத்தாலியின் அண்டோனியோ காண்ட்ரீவா, இன்சிக்னி ஆகியோர் அடித்த கோல் முயற்சிகளை அறிமுக கோல் கீப்பர் கபலெரோ தடுத்து உலகக்கோப்பையில் ஆடும் தனது வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டார்.

75வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் பனேகா மிக அருமையாக இடது காலால் உதைத்து முதல் கோலை அடித்து முன்னிலை கொடுத்தார். 

அர்ஜெண்டினா, இத்தாலி ஆகிய கால்பந்து நாடுகள் தங்களிடையே 6 உலகக்கோப்பைகளை வென்றாலும் மான்செஸ்டர் ரசிகர்கள் இந்த இத்தாலி அர்ஜெண்டின அணிகளை அங்கீகரிக்கவில்லை என்பது காலி இருக்கைகள் நிரூபித்தன.

தொடர்புடைய செய்திகள்



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close