[X] Close

பிரித்வி ஷா நீக்கம்: முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்


prithvi-saw-removed-from-first-test-against-australia

கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட பிரித்வி ஷா : படம் உதவி ட்விட்டர்

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 11:49 am
  • அ+ அ-

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா அடிலெய்டில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

2-ம் நாளான நேற்று இந்திய 348 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய லெவன் அணி இன்று பேட் செய்து வருகிறது. அப்போது, அஸ்வின் வீசிய பந்தில், ஆஸ்திரேலிய லெவன் அணி வீரர் மேக்ஸ் பிரயன்ட் தூக்கி அடித்தார்

2-ம் நாளான நேற்று இந்திய 348 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய லெவன் அணி இன்று பேட் செய்து வருகிறது. அப்போது, அஸ்வின் வீசிய பந்தில், ஆஸ்திரேலிய லெவன் அணி வீரர் மேக்ஸ் பிரயன்ட் தூக்கி அடித்தார்.

பவுண்டரி லைனில் ஃபீல்டிங்குக்கு நின்றிருந்த இந்திய வீரர் பிரித்வி ஷா, அந்தப் பந்தை தாவிப் பிடிக்க முற்பட்டார். ஆனால், அப்போது காலைத் தரையில் ஊன்றியபோது, இடது கணுக்காலை மடக்கி விழுந்தார். இதில் அவருக்குக் கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டு வலியால் சுருண்டார். உடனடியாக இந்திய உடற்தகுதி நிபுணர் பாட்ரிக் பர்ஹத், உதவியாளர்கள் வரவழைக்கப்பட்டு பிரித்வி ஷாவை ஆய்வு செய்தனர். ஆனால், பிரித்வி ஷாவால் எழுந்து நடக்க முடியவில்லை. இதையடுத்து, பிரித்வி ஷாவை தூக்கிச் சென்றனர்.

பின்னர் ஓய்வு அறைக்குச் சென்ற கேப்டன் விராட் கோலி பிரித்வி ஷாவின் உடல் நிலையைக் கேட்டறிந்தார். அதன்பின் வாகனம் மூலம் பிரித்வி ஷா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் பிரித்வி ஷாவின் கணுக்காலில் தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் 10 நாட்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “ பிரித்வி ஷாவுக்கு ஏற்பட்ட காயத்தை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரின் தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டது தெரிந்தது.

இதையடுத்து, அவர் அடிலெய்டில் டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார். முதல் போட்டிக்கான அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். தற்போது பிரித்வி ஷாவுக்கு சிகிச்சையும், காயத்தில் இருந்து மீள பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே பேட்டிங்கில் ஃபார்ம் இல்லாமல் கே.எல்.ராகுல் தவித்து வரும் நிலையில், பிரித்வி ஷா ஓரளவுக்கு அணிக்கு ஆறுதலாக இருந்தார். குட்டி சச்சின் என்று அழைக்கப்பட்ட பிரித்வி ஷாவின் பேட்டிங்கைப் பார்க்க ஆஸ்திரேலிய ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டது இந்திய அணிக்குப் பின்னடைவுதான்.

பிரித்வி ஷா முதல் டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக ஷிகர் தவண் அல்லது நீண்டநாட்களாக வாய்ப்பை எதிர்பார்த்துவரும் மயங்க் அகர்வால் அழைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close