[X] Close

டாஸ் போடுவதற்கு ‘ஷார்ட்ஸ்’ அணிந்து வந்த விராட் கோலி; மரியாதைக் கெட்டத் தனமாக உள்ளது: கடும் சாடல்


kohli-in-trouble-again

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 08:28 am
  • அ+ அ-

விராட் கோலி என்றாலே ஏதாவது சர்ச்சை கிளம்பியபடியே தான் இருக்கும், அதுவும் இது ஆஸ்திரேலிய பயணம் அல்லவா, அனைவரது பார்வைகளும் கேமராக்களும் அவர் மீதுதான் இருக்கும் என்பதை அவர் உணர்ந்தவராகத் தெரியவில்லை.

விராட் கோலியிடம் இன்னொரு பிடிவாத குணமென்னவெனில் ஒரு விஷயம் விமர்சிக்கப்படுகிறதா, அந்த விமர்சனம் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர் மன்னிப்போ வருத்தமோ தெரிவித்ததில்லை.

இந்நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியுடனான பயிற்சி போட்டி முதல் நாள் ஆட்டம் முழுதும் மழையால் நடைபெறவில்லை, இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. அனுபவமற்ற கத்துக்குட்டி பந்து வீச்சில் இந்தியா ஆல் அவுட் ஆனது வேறு கதை.

ஆனால் டாஸ் போட வரும்போது ஏதோ வாக்கிங் போவது போல் அவர் ஷார்ட்ஸ் அணிந்து வந்தது பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்ததாக நெட்டிசன்கள் பாய்ந்துள்ளனர்.

அதுவும் பிசிசிஐ  இணையதளம் இந்தப் புகைப்படத்தை வேறு வெளியிட்டு தம்ம்பட்டம் அடித்ததும் நெட்டிசன்கள் மத்தியில் நல்லதாகப் பார்க்கப்படவில்லை. பலரும் மரியாதை குறைவான செயல் என்று விராட் கோலியை கடுமையாகச் சாடியுள்ளனர்.

“இழிவானது, மரியாதைக் கெட்டத்தனம்,  இந்த நடத்தை மன்னிக்க முடியாத்து’ என்று பிரகாஷ் என்பவர் தன் ட்வீட்டில் சாடியுள்ளார்.

ஒரு நாட்டின் கிரிக்கெட் அணியின் கேப்டன் அந்நாட்டு தூதுவருக்குச் சமம் என்று கருதப்படும் நிலையில் அரைகுறையாக ஷார்ட்ஸ் அணிந்து டாஸ் போட்டது பலரையும் புண்படுத்தியுள்ளது என்கிறார் இன்னொரு ட்விட்டர்வாசி.

சிறந்த பேட்ஸ்மெனாக இருக்கலாம் ஆனால் கிரிக்கெட்டுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள் கோலி. குறிப்பாக எதிரணியினரை மதிக்க வேண்டும், இது மிகவும் தீங்கான ஒரு முன்னுதாரணம் என்று இன்னொரு நெட்டிசன் அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று 64 ரன்களில் டீன் ஏஜ் பவுலரிடம் காட் அண்ட் பவுல்டு ஆனார் விராட் கோலி.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close