[X] Close

என் மீதான அவதூறுகள் வருத்தமளிக்கின்றன!- மிதாலி ராஜ்


hurt-by-aspersions-cast-on-me-mithaliraj

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Nov, 2018 13:49 pm
  • அ+ அ-

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட வீராங்கனை மிதாலி ராஜ், தன் மீதான அவதூறுகள் வருத்தமளிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் போவர், பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மிதாலி ராஜ் சுயநலத்துடன் செயல்பட்டதாகவும் அணியின் நன்மையைக் காட்டிலும் தனது நலனில் அதிக கவனம் செலுத்தியதாகவும் கூறியிருந்தார்.
இது தன்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கியிருப்பதாக மித்தாலி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களால் நான் மிகவும் வருந்துகிறேன். 20 ஆண்டுகளாக நான் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் விளையாடினேன். எனது கடின உழைப்பு, வியர்வை எல்லாம் பலனற்றதாகிவிட்டது. எனது தேசப்பற்று இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. எல்லாம் சரிகிறது. இதுதான் என் வாழ்வின் கருப்பு நாள். கடவுளே எனக்கு பலத்தைக்கொடு" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மித்தாலியின் மேலாளர் அனிஷா குப்தா, "மித்தாலியின் ரசிகர் நான். 20 ஆண்டுகளாக அவர் செலுத்திய கடின உழைப்பால் மகளிர் கிரிக்கெட் வெளிச்சத்து வந்தது. ஆனால், அதன் நிழலிலேயே இன்று நாம் அவரை மறைக்கிறோம். மித்தாலி, ப்ளூ ஜெர்ஸி உடையில் நீ செய்தது எல்லாமே சரிதான். இனியும் சரியாகத்தான் இருக்கும். தேசம் உன்னை நேசிக்கிறது" என பதிலளித்துள்ளார்.

முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. இந்த நிலையில் மிகவும் முக்கியமான நாக்-அவுட் ஆட்டத்தில் முன்னாள் கேப்டனான மிதாலிராஜ் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

காயத்திலிருந்து குணமடைந்த பின்னரும் அவர் அரை இறுதியில் சேர்க்கப்படாத விஷயம் பெரிதாகக் கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், அணியின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என விளக்கம் அளித்து இருந்தார். நிர்வாகக் குழு (சிஓஏ) உறுப்பினரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான டயானா எடுல்ஜியும் கேப்டன் கவுர் எடுத்த முடிவை ஆதரித்து இருந்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close