[X] Close

ஆஸி.க்கு எதிராக சச்சின், கவாஸ்கர் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?


will-kohli-creates-record

  • kamadenu
  • Posted: 29 Nov, 2018 08:17 am
  • அ+ அ-

சாதனை கிங் கோலியின் தலையில் இன்னொரு மகுடம் ஏறுவதற்காக ஆஸ்திரேலிய தொடர் காத்திருக்கிறது.  டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

கோலி, 2018-ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இ.தீவுகளுக்கு எதிராக சதம் எடுத்துள்ளார், மேலும் இந்த ஆண்டில் 10 போட்டிகளில் 1063 ரன்களை 59.05 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார் விராட் கோலி.

கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4 சதங்களை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் சச்சின் டெண்டுல்கர் 20 போட்டிகளி 6 சதங்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 11 போட்டிகளில் 5 சதங்கள் எடுத்துள்ளார் கோலி. எனவே சச்சின் டெண்டுல்கரின் 6 சதங்கள் சாதனையை முறியடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே போல் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸி. மண்ணில் 5 சதங்கள் எடுத்ததன் மூலம் சுனில் கவாஸ்கருக்கு இணையாக இருக்கிறார் விராட் கோலி, இன்னும் ஒரு சதம் எடுத்தால் கவாஸ்கரைக் கடந்து சச்சினுடன் சமன் செய்வார். இன்னொரு சதம் எடுத்தால் சச்சின் டெண்டுல்கரைக் கடந்து சாதனை நிகழ்த்துவார் கோலி.

இந்தத் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 669 ரன்களை எடுப்பது மிகமிகக் கடினம், அப்படி எடுத்தால் அதிவேகமாக டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்களை எடுத்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார் கோலி.

ஆகவே இந்த சொந்த எதிர்பார்ப்புகளுடன் அணியையும் முதல் தொடர் வெற்றிக்கு இட்டுச் செல்வாரா விராட் கோலி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close