டெஸ்ட் தரவரிசையில் அசைக்க முடியா கிங் கோலி; ஆண்டர்சனைப் பின்னுக்குத் தள்ளி ரபாடா முதலிடம்: டாப் 10-ல் யாசிர் ஷா

ரபாடா. | ராய்ட்டர்ஸ்.
ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்காவின் வேகப்புயல் கேகிஸோ ரபாடா முதலிடம் வகிக்கிறார்.
இந்தியாவுக்கு எதிராக கடைசியாக டெஸ்ட்டில் 43 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 10% தரவரிசைப் புள்ளிகளை இழந்து ரபாடாவுக்கு முன்னேற வாய்ப்பானது.
நியூசிலாந்துக்கு எதிரான 2வடு டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய யாசிர் ஷா டாப் 10-க்குள் நுழைந்து 10-ம் இடத்தில் இருக்கிறார், நியூஸி.யின் நீல் வாக்னர் 13ம் இடத்துக்குச் சென்றார்.
இலங்கையை ஒயிட்வாஷ் செய்த கடைசி கொழும்பு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ 6 இடங்கள் முன்னேறி 16ம் இடத்துக்கும் வங்கதேசத்தின் சாதனையாளர் மோமினுல் ஹக் 11 இடங்கள் முன்னேறி 24ம் இடத்த்துக்கும் வந்துள்ளனர். பாகிஸ்தானின் அசார் அலி 12ம் இடத்துக்கும் இலங்கையின் குஷால் மெண்டிஸ் 20வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் 99 ரன்களை அடித்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் கிங் கோலி 935 புள்ளிகளுடன் முதலிடத்தில் அசைக்க முடியாமல் இருக்கிறார், அடுத்த இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் 910 புள்ளிகளுடன் இருக்கிறார். கேன் வில்லியம்சன் 876 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் 807 புள்ளிகளுடன் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 4ம் இடத்திலும் 803 புள்ளிகளுடன் டேவிட் வார்னர் 5ம் இடத்திலும் உள்ளனர். புஜாரா 765 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளார்.
பந்து வீச்சுத் தரவரிசையில் ரபாடா, ஆண்டர்சனுக்குப் பிறகு பாகிஸ்தானின் மொகமது அப்பாஸ் 829 புள்ளிகளுட்ன 3ம் இடத்திலும் வெர்னன் பிலாண்டர் 4ம் இடத்திலும் ரவீந்திர ஜடேஜா 5ம் இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரநிலையில் ஷாகிப் அல் ஹசன் 405 புள்ளிகளுடன் முதலிடம். ஜடேஜா 400 புள்ளிகளுடன் 2ம் இடம். 3ம் இடத்தில் ஹோல்டரும் 4ம் இடத்தில் பிலாண்டரும், 5ம் இடத்திலும் பென்ஸ்டோக்ஸும் உள்ளனர்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- தி.நகர் பேருந்து நிலையத்தில் விபத்து: ஓட்டுநரின் கவனக்குறைவால் பேருந்துகளுக்கு இடையில் சிக்கிய பெண் பரிதாப பலி
- அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்யும்? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்
- நாளை 3 மாவட்டங்களில் கனமழை
- கஜா புயலால் சென்னிமலையில் பெட்ஷீட் விற்பனை அதிகரிப்பு: தரமற்ற போர்வைகள் விற்பனையால் நெசவாளர்கள் வேதனை