[X] Close

இந்திய அணி வீராங்கனை மிதாலிராஜ் விவகாரம்: பிசிசிஐ அதிகாரியிடம் ஹர்மின் பிரீத் விளக்கம்


mithali-raj-issue

ஆட்டநாயகி, தொடர்நாயகி விருதை வென்ற மிதாலி ராஜ். - Getty Images

  • kamadenu
  • Posted: 27 Nov, 2018 10:25 am
  • அ+ அ-

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங் கனை மிதாலி ராஜ் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய(பிசிசிஐ) தலைமைச் செயல் அதி காரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோரிடம் அணியின் கேப்டன் ஹர் மன் பிரீத் கவுர் விளக்கம் அளித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமை யிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.

இந்த நிலையில் மிகவும் முக்கியமான நாக்-அவுட் ஆட்டத்தில் முன்னாள் கேப்ட னான மிதாலிராஜ் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காயத்திலிருந்து குணமடைந்த பின்னரும் அவர் அரை இறுதியில் சேர்க்கப்படாத விஷயம் பெரி தாகக் கிளம்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் விளக்கம் அளித்து இரு ந்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “ஆஸ்திரேலியா வுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் சிறப் பாக ஆடி வெற்றி பெற் றோம். எனவே அந்த கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் ஆடும் லெவனில் மிதாலி ராஜுக்கு இடம் கிடைக்கவில்லை. எந்த முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

ஆனால் மிதாலிராஜின் பயிற்சியாளர், ஹர்மன் பிரீத் கவுர் மீது கடுமையான குற்றச் சாட்டுகளைத் தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகித்து வரும் நிர்வாகக் குழு (சிஓஏ) விசாரணை நடத்த முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில் மிதாலிராஜ் விவகாரம் தொடர்பாக நேற்று கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் (கிரிக்கெட் செயல்பாடுகள்) சபா கரீம் ஆகியோரைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் ஜோரி கூறும்போது, “மிதாலி விவகா ரம் தொடர்பாக ஹர்மன் பிரீத் கவுர் என்னைச் சந்தித்தார். அதைப் போலவே மிதாலி ராஜ், மேலாளர் திருப்தி பட்டாச்சார்யா ஆகி யோரும் தனித்தனியே என்னைச் சந்தித்து விளக்கம் அளித் தனர். அவர்களது விளக்கங்களை நாங்கள் கேட்டுக் கொண்டோம்” என்றார்.

அதைப் போலவே சபா கரீமையும் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், திருப்தி பட்டாச் சார்யா ஆகியோர் சந்தித்தனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்ற விவரம் செய்தி யாளர்களிடம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இதுதொடர்பாக தங் களது விரிவான அறிக்கையை, பிசிசிஐ நிரவாகக் குழுவிடம் ராகுல் ஜோரி, சபா கரீம் ஆகியோர் சமர்ப்பிக்கவுள்ளனர். அந்த அறிக்கைகளை பரிசீலித்த பிறகு இந்த விவ காரம் தொடர்பாக நிர்வாகக் குழு முடிவெடுக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் ஜோரியையும், சபா கரீமையும் வரும் 28-ம் தேதி சந்தித்து விளக்கம் அளிக்குமாறு பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிர்வாகக் குழு (சிஓஏ) உறுப்பினரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான டயானா எடுல்ஜி கூறும்போது,”அணி நிர்வா கம் எடுக்கும் முடிவை யாரும் கேள்வி கேட்க முடியாது.

இந்த விஷயத்தை அனை வரும் பெரிதாக்குகிறார்கள் என்று நான் நினைக் கிறேன். அந்த நாள் இந்திய மகளிர் அணிக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது. ஆனால் அந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் யாரும் இந் தக் கேள்வியை எழுப்பியிருக்க மாட்டார்கள்.

ஆடும் லெவன் குறித்து நாம் கேள்வி எழுப்ப முடியாது. இதற்கு உதாரண மாக சமீபத்திய போட்டி ஒன்றைக் கூறலாம். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளின் முதல் டி20 போட்டி பிரிஸ்பன் நகரில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டி யில் கிருணல் பாண்டியா சரியா கப் பந்துவீசவில்லை. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அவர் அபார மாக பந்துவீசி 4 விக்கெட்களைச் சாய்த்தார். இதுபோன்ற விஷயங் கள் கிரிக்கெட் விளை யாட்டில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும்.

ஹர்மன் பிரீத், மிதாலி ராஜ் ஆகியோருடன் பேசுவது தொடர்பாக நிர்வாகக் குழு இது வரை முடிவு செய்யவில்லை.

இது அணித் தேர்வு தொடர் பான விஷயம். இதில் நிர்வா கக் குழு தலையிட விரும்ப வில்லை. இதுதொடர்பாக எங்களுடன் அவர்கள் பேச விரும்பினால் நாங்கள் பேசு வோம்” என்றார். 

பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close