‘எல்லை மீறாதீர்கள்’- தேவையற்ற வார்த்தையைப் பயன்படுத்திய நிருபர் மீது பாக். வீரர் பாபர் ஆஸம் பாய்ச்சல்

பாபர் ஆஸம். | ஏ.எஃப்.பி.
ஒரு முறை விராட் கோலியுடன் பாபர் ஆஸமை பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஒப்பிட்டார், பிறகு கடும் எதிர்ப்புகளும், கிண்டலும் கிளம்ப பிறகு ஒருவாறு கோலி போல் வருவார் என்று கூறினேன் என்று மாற்றினார்.
இந்நிலையில் தொடர்ந்து நல்ல பார்மில் இருந்து வரும் பாபர் ஆஸம் நடைபெற்று வரும் நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 127 ரன்கள் எடுத்தார், ஹாரிஸ் சொஹைல் 147 ரன்கள் எடுத்தார்.
இந்த இன்னிங்ஸுக்காக பாபர் ஆஸம் மீது பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால் பாகிஸ்தான் நிருபர் ஜைனாப் அப்பாஸ் செய்த ஒரு ட்வீட் பாபர் ஆஸமின் கோபத்தைக் கிளறியது. ஆனால் ஜைனாப் அப்பாஸ் பாபர் ஆஸமை பாராட்டவே செய்தார். ஆனால் அதில் தேவையில்லாமல் மிக்கி ஆர்தரின் செல்லப்பிள்ளை பாபர் ஆஸமின் சதம் என்று குறிப்பிட்டுவிட்டார், இது பாபஸ் ஆஸமுக்கு கோபத்தை மூட்டியுள்ளது.
அவர் தன் ட்வீட்டில், “வெல் பிளேய்ட் பாபர் ஆஸம், வீரர்கள் மிக்கி ஆர்தரைப் பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது, மிக்கி ஆர்தர் தன் செல்லப்பிள்ளையின் சதத்தைக் கொண்டாடினார்” என்று ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு கோபாவேசமடைந்த பாபர் ஆஸம், “எதைச் சொல்வதற்கு முன்னாலும் சிந்தித்துச் செயல்படுங்கள், உங்கள் எல்லைகளை மீறவேண்டாம்” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- அலறவிட்ட யாசீர் ஷா; 41 ரன்களுக்கு 8 விக்கெட்; 50/0 விலிருந்து 90 ஆல் அவுட் ஆன நியூஸி.; 6 வீரர்கள் டக் அவுட்
- 55 ஆண்டுகளுக்குப் பிறகு அன்னிய மண்ணில் இங்கிலாந்து சாதனை வெற்றி; அச்சுறுத்திய கடைசி விக். கூட்டணி: இலங்கை 3-0 தோல்வி
- ஐசிசி டி20 தரவரிசை: குல்தீப் சூப்பர்; தவண் புதிய முன்னேற்றம்; ரோஹித் சர்மா சறுக்கல்
- பிரிஸ்பன் டி20 போட்டியில் 50 ரன்களுக்கும் மேல் கொடுத்து விட்டேனாம்... நையாண்டி செய்து சிரித்தார் ஹர்திக்: குருணால் பாண்டியா ருசிகரம்