[X] Close

ஐசிசி டி20 தரவரிசை: குல்தீப் சூப்பர்; தவண் புதிய முன்னேற்றம்; ரோஹித் சர்மா சறுக்கல்


icct20-rankings

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 16:48 pm
  • அ+ அ-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டி20 தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிந்ததையடுத்து, தரவரிசையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாகப் பந்துவீசியதையடுத்து, டி20 தரவரிசையில் உலக அளவில் 20 இடங்கள் உயர்ந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்.

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா பிரிஸ்பன் போட்டியில் ஆட்டநாயகன் விருதுபெற்றார். இவர் 17 இடங்கள் முன்னேறி 5-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

டாப்10 பந்துவீச்சாளர்களில் 9 பேர் சுழற்பந்துவீச்சாளர்களும், பாகிஸ்தானின் ஃபாஹீம் அஷ்ரப்(7-வது இடம்) மட்டும் வேகப்பந்துவீச்சாளராக உள்ளார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், 2-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சதாப் கான் உள்ளனர். 4-ம் இடத்தில் இங்கிலாந்து வீரர் அதில் ரஷித் உள்ளார். 6-வது இடத்தில் நியூசிலாந்து வீரர் இஷ் சோதியும், 8முதல் 10 இடங்கள் வரையில் இமாத் வாசிம்(பாக்), இம்ரான் தாஹிர்(தெ.ஆப்), சஹிப் அல் ஹசன்(வங்க) ஆகியோர் உள்ளனர். இந்திய வீரர் யஜுவேந்திர சாஹல் 11-வது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் குர்னல் பாண்டியா 98-வது இடத்தில் இருந்து 66-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். புவனேஷ்வர் குமார் 19-வது இடத்திலும், பும்ரா 21-வது இடத்திலும் உள்ளனர்.

பேட்டிங் வரிசையில் இந்திய வீரர் ஷிகர் தவண் 5 இடங்கள் நகர்ந்து, 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டி20 போட்டியில் சொதப்பியதையடுத்து, ரோஹித் சர்மா 6-வது இடத்துக்கும், கே.எல்.ராகுல் 9-வது இடத்துக்கும் சரிந்துள்ளனர். கேப்டன் விராட் கோலி கடைசி டி20 போட்டியில் 61 ரன்கள் விளாசியதால்,14-வது இடத்திலேயே நீடிக்கிறார்.

ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு இடம் சரிந்து 3-ம் இடத்துக்குச் சென்றுள்ளார். மேக்ஸ்வெல், 6-வது இடத்தில் இருந்து 5-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய கேப்டன் டூப்பிளசிஸ் ஒரு இடம் முன்னேறி 21-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். குயின்டன் டீ காக் 36-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close