[X] Close

தோனி குறித்து கேள்வி: அதிபர் முஷாரப்பை 'கலாய்த்த' கங்குலி


ganguly-answer-for-dhoni-question

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 13:38 pm
  • அ+ அ-

பாகிஸ்தானுக்கு எதிராக தோனி காட்டடி பேட்டிங்கைப் பார்த்த முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கேட்ட கேள்விக்கு அவரை கங்குலி தனது பதிலால் கலாய்த்துள்ளார்.

கங்குலி கேப்டனாக இருக்கும்போதுதான் தோனி அணியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். ஆனால், முதல் போட்டியிலேயே டக்அவுட்டில் வெளியேறினார். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் கங்குலி தொடர்ந்து வாய்ப்பு அளித்தார்.

2006-ம் ஆண்டு டிராவிட் தலைமையில் பாகிஸ்தான் சென்ற இந்திய அணியிலும் தோனி இடம் பெற்றார். லாகூரில் நடந்த போட்டியில் தோனி 46 பந்துகளில் 72 ரன்கள் விளாசி பாகிஸ்தானை வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்தார். அந்த போட்டிக்கு டிராவிட் கேப்டனாக இருந்தார்.

அப்போது பாகிஸ்தானின் அதிபராக இருந்த பர்வேஷ் முஷாரப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தார். தோனியின் அதிரடியான பேட்டிங், நீண்ட தலைமுடி ஆகியவற்றைப் பார்த்து அசந்துபோன முஷாரப் கங்குலியிடம் தோனி குறித்து கேட்ட கேள்விக்கு அவரையே கலாய்க்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.

அதுகுறித்து சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள டோலிகுங்கே கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் கங்குலி தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தானுக்கு நாங்கள் பயணித்திருந்த நேரத்தில் தோனியின் ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. குறிப்பாக தோனியின் நீண்ட தலைமுடி, பேட்டிங் ஸ்டைல், அதிரடி ஆட்டம் அதிபர் முஷாரப்பை கவர்ந்துவிட்டது. அவர் பேசிய வார்த்தைகள் இன்னும் நினைவில் இருக்கிறது.

லாகூரில் நடந்த போட்டியில் தோனி பாகிஸ்தானுக்கு எதிராக 46 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். அப்போது என்னிடம் பேசிய அதிபர் முஷாரப் தோனியின் அதிரடியான பேட்டிங்கையும், தலைமுடியையும் பார்த்து, எங்கிருந்து இந்த ஆளைப் பிடித்தீர்கள், எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு நான் சிரித்துக்கொண்டே, வாகா எல்லையில் இருந்து தோனியைக் கொண்டு வந்தோம். வாகா எல்லைக்கு அருகே தோனி நடந்து சென்றபோது அவரை இழுத்துக்கொண்டுவந்துவிட்டோம் என்றுதெரிவித்தேன். இதைக் கேட்டு முஷாரப் சிரித்தார்.

அன்று மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது, தோனிக்கு பரிசு வழங்கிய முஷாரப், இந்த மைதானத்தில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கையில் வைத்துள்ள பதாகைகளில் நீங்கள் முடிவெட்டிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். என்னுடைய அறிவுரையை நீங்கள் ஏற்றுக்கொண்டால், கவர்ச்கரமான ஹேர்ஸ்டையில் இருப்பீர்கள் என்று கூறியவுடன் சிரித்துவிட்டோம்.

என்னைப் பொருத்தவரை தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தவிடவில்லை. இன்னும் சிக்ஸர்அடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது, அவரை அவரின் விருப்பப்படி விளையாட அனுமதிக்க வேண்டும்’’ என சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close