[X] Close

கோலிக்கு டெஸ்ட் தொடரில் 'செக்' வைப்போம்: ஆஸி. விக்கெட் கீப்பர் ஆவேசம்


australian-keeper-about-kohli

விராட் கோலி: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 12:53 pm
  • அ+ அ-

டி20 போட்டித் தொடரில் இந்தியக் கேப்டன் விராட் கோலி எங்களுக்கு நெருக்கடி கொடுத்துவிட்டார், ஆனால், டெஸ்ட் போட்டியில் செக் வைப்போம் என்று ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே தெரிவித்துள்ளார்.

சிட்னியில் நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது.

165 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 2 பந்துகள் இருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி 41பந்துகளில் 61 ரன்களும், தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தனர்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு செக் வைப்போம் என்று ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரை தெரிவித்தள்ளார். அவர் கூறுகையில், “விராட் கோலி மிகவும் சிறப்பாகப் பேட் செய்தார். கடைசி நேரத்தில் எங்கள் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார்.

 தொடக்கத்தில் தவணும் பவர்ப்ளேயில் சிறப்பாக விளையாடினார், இதனால் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. டி20 போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். ஆனால், டெஸ்ட் போட்டியில் அவருக்கு செக் வைப்போம். டெஸ்ட் போட்டி என்பது தனிக்கதை.எங்களிடம் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களும், நாதன் லயான் போன்ற வீரர்கள் உள்ளனர். ஆதலால், டெஸ்ட் தொடர் அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் சிறப்பானதாக அமையும்.

நான் அமைத்துக்கொடுத்தது கடினமான இலக்குதான். ஆனால், விராட் கோலி தலைமையிலான அணி நன்றாக சேஸிங் செய்துவிட்டனர். பவர்ப்ளேயில் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தது இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. நாங்கள் தோல்வியை விரும்பவில்லை, வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு அருகில் வந்தும், கோலியின் சிறப்பான ஆட்டத்தால் எங்களிடம் இருந்து வெற்றி பறிபோனது

இவ்வாறு கேரே தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close