[X] Close

மிதாலி ராஜ் போலவே நானும் உச்சத்தில் இருந்த போது அணியிலிருந்து நீக்கப்பட்டேன்: சவுவர் கங்குலி


ganguly-speech-about-mithali-raj

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 19:05 pm
  • அ+ அ-

பிடிஐ

மகளிர் டி20  உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மூத்த வீரரும் முன்னாள் கேப்டனுமான மிதாலி ராஜ் உட்கார வைக்கப்பட்டது கடும் சர்ச்சைகளைக் கிளப்ப தற்போது கங்குலி தானும் தன் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அணியிலிருந்து நீக்கப்பட்டதாக மிதாலி ராஜுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், அயர்லாந்துக்கு எதிராக அடுத்தடுத்து 2 அரைசதங்களை அடித்த மிதாலி ராஜ் காயம் காரணமாக கடைசி லீக் போட்டியில் ஆஸி. க்கு எதிராக உட்கார வைக்கப்பட்டார், கடைசியில் இந்திய அணி செம உதை வாங்கிய இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் டாலிகஞ்ச் கிளப்பில் கங்குலி இது பற்றி கூறும்போது, “நானும் கேப்டன் பதவிக்குப் பிறகு உட்கார வைக்கப்பட்டேன். மிதாலி ராஜ் அன்று உட்காரவைக்கப்பட்டதைப் பார்த்த போது நான் ‘வெல்கம் டு த குரூப்’ என்று கூறினேன்.

கேப்டன்களை உட்காருமாறு கோருகின்றனர். அதைச் செய்து விட்டுப் போவோம். நான் பைசலாபாத்தில் இதைச் செய்தேன்.  15 மாதங்களுக்கு ஒருநாள் போட்டியில் நான் ஆடவில்லை. ஆனால் அப்போதுதான் ஒருநாள் போட்டிகளில் நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காலம். இது வாழ்க்கையில் நடப்பதுதான். மிகச்சிறந்தவர்களுக்கு சில வேளைகளில் கதவு காட்டப்படும்.” என்று கூறிய கங்குலி, இது மிதாலி ராஜுக்கு முடிவு அல்ல என்று ஆறுதல் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close