[X] Close

பாண்டியா பந்துவீச்சில் மட்டுப்பட்டது ஆஸி.: இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு


3rd-t20-first-batting-report

4 விக்கெட் வீழ்த்திய குர்னல் பாண்டியா: ப டம் உதவி ட்விட்டர்

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 15:48 pm
  • அ+ அ-

சிட்னியில் நடைபெற்றுவரும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்திய சுழற்பந்துவீச்சாளர் குர்னல் பாண்டியா அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருந்தபோதிலும், தொடக்க வீரர்கள் ஆரோன் பிஞ்ச், ஷார்ட் நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துவிட்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட், மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. 2 டி20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 3-வது போட்டி சிட்னி நகரில் இன்று நடந்து வருகிறது. முதல் போட்டியில் 4 ரன்களில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

சிட்னியில் நடந்து வரும் 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவி்லலை.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பிஞ்ச், ஷார்ட் இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினார். ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து ரன்களைச் சேர்த்தனர். கலீல் அகமது வீசிய 2-வது ஓவரில் பிஞ்ச்க்கு ரன் அவுட் முயற்சி செய்யப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. அதன்பின் இருவரும் இந்திய பந்துவீச்சை எளிதாகக் கையாண்டு ரன்களைச் சேர்த்தனர். ஓவருக்கு 6 ரன்ரேட் வீதம் சென்றது.

8-வது ஓவரை குர்னல் பாண்டியா வீசினார். பிஞ்ச் அடித்த பந்தை லாங்-ஆன் திசையில் இருந்த ரோஹித் சர்மா கேட்சை நழுவவிட்டார். அதே ஓவரில் பிஞ்ச், ஷார்ட் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்து ரன்களைச் சேர்த்தனர்.

குல்தீப் வீசிய 9-வது ஓவரில் பிஞ்ச் 28 ரன்கள் சேர்த்திருந்தபோது பாண்டயாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 68 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி அடித்தார்.

பாண்டியா வீசிய 10-வது ஓவரில்அடுத்தடுத்து திருப்புமுனை நிகழ்ந்தது. முதல்பந்தை சந்தித்த ஷார்ட் 33 ரன்களில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார், அடுத்து வந்த, மெக்டர்மார்ட்டும் எல்பிடபிள்யு முறையில் டக்அவுட்டில் பெவிலியின் திரும்பினார். அடுத்தடுத்து இரு ஓவரில் 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது.

14-வது ஓவரை குர்னல் பாண்டியா வீசினார். முதல்பந்தை தூக்கி லாங்-ஆன் திசையில் மேக்ஸ்வெல் அடிக்க அது ரோஹித் சர்மாவிடம் தஞ்சம் புகுந்தது. மேக்ஸ்வெல் 13 ரன்களில் வெளியேறினார்.

கேரே, ஸ்டோய்னிஸ் களத்தில் இருந்தனர். விக்கெட் கீப்பர் கேரே ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து அணியைக் காப்பாற்றிவந்தார். பாண்டியா வீசிய 16-வது ஓவரில் 5-வது பந்தில், கேரே தூக்கியடித்தார். ஆனால், மிட்விக்கெட்டில் கோலியிடம் கேட் ஆனது. கேரே 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பும்ரா வீசிய 18-வது ஓவரில் ஸ்டோய்னிஸ் ஒரு ரன்அடித்துவிட்டு ஓட முயற்சித்தார். ஆனால், மறுமுனையில் இருந்த லின்னை(13ரன்கள்) ரன் அவுட் செய்தார் பும்ரா.

கடைசி இரு ஓவர்களை பும்ராவும், புவனேஷ்வர் குமாரும் கட்டுப்பாடின்றி வீசியதால், ரன்கள் அதிகமாகச் சென்றன. இரு ஓவர்களிலும் 4 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.

ஸ்டோய்னிஸ் 25 ரன்களிலும், கோல்டர் நீல் 13 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில் குர்னல் பாண்டியா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close