[X] Close

மே.இ.தீவுகளின் மோசமான பேட்டிங்; தைஜுல் இஸ்லாம் 6 விக்: வங்கதேசம் அபார வெற்றி


bangaldesh-wins-match-against-west-indies

வங்கதேச அணியினர். | ஏ.எஃப்.பி.

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 08:43 am
  • அ+ அ-

சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்கான 204 ரன்களை எடுக்க முடியாமல் படுமோசமான பேட்டிங்கில் மே.இ.தீவுகள் அணி 139 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

முன்னதாக வங்கதேச அணி தன் 2வது இன்னிங்சில் 125 ரன்களுக்குச் சுருண்டது. பிஷூ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மே.இ.தீவுகளுக்கு 204 ரன்கள் வெற்றி இலக்கு.

வங்கதேச வெற்றியை நிர்ணயித்தவர் தைஜுல் இஸ்லாம் இவர் 2வது இன்னிங்சில் 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  ஆர்ம் பால் என்பதை பிரமாதமாகப் பயன்படுத்தினார்.  பிட்ச் குழி பிட்ச்தான், ஆனால் மே.இ.தீவுகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. 9வது விக்கெட்டுக்காக ஜோமெல் வாரிக்கன், சுனி அம்ப்ரீஸ் 63 ரன்கள் சேர்த்து அச்சுறுத்தினர். வெற்றியை நோக்கி மே.இ.தீவுகள் செல்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நிலையில் மெஹதி ஹசன் மிராஸ் கூட்டணியை உடைத்தார். அம்ப்ரீஸ் விக்கெட்டை தைஜுல் வீழ்த்தி ஆட்டத்தை முடித்தார்.  சம்பிரதாயம் முடிந்தது.

ஆனால் கடைசி அம்ப்ரீஸ் விக்கெட் நாட் அவுட். விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததாக அவுட் தீர்ப்பு, ஆனால் பந்துக்கும் மட்டைக்கும் தொடர்பில்லை என்பது ரீப்ளேயில் தெரிந்தது. அம்ப்ரீஸ் 43 ரன்களில் அவுட் ஆனார், மே.இ.தீவுகள் தோல்வி கண்டது.

204 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணியில் முதலில் போவெல் படுமோசமாக ஷாகிப் பந்தை மேலேறி வந்து அடிக்க நினைத்து பந்தை விட்டார், அது ஒரு நேர் பந்து தவறான லைனில் ஆடினார், முன்னதாகவே சுற்றினார், அவர் இறங்கி வருவதை ஷாகிப் பார்த்து விட்டார். ஸ்டம்ப்டு ஆகி வெளியேறி சரிவைத் தொடங்கி வைத்தார்.  ஷேய் ஹோப்புக்கு ஷாகிப் பந்து எப்படி கிளவ்வில் பட்டுச் சென்றது என்றே தெரியவில்லை. பிராத்வெய்ட், ஸ்டூவர்ட் சேஸ் இருவரையும் ஒரே ஒவரில் தைஜுல் காலி செய்தார்.

ஹெட்மையர் மீண்டும் இறங்கி ஸ்பின்னர்களுக்கு அதிரடி மூலம் எதிர்த்தாக்குதல் நடத்தினார். இறங்கி ஷாகிப் ஹல் ஹசனை 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் விளாசினார். இதே அணுகுமுறையில் 19 பந்துகளில் 27 எடுத்து பிறகு மெஹதி பந்தில் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். டவ்ரிச்சை பேக்புட்டில் எல்.பியாக்கினார் தைஜுல்.  தேவேந்திர பிஷூ அருமையான தைஜுல் பந்தில் பவுல்டு ஆனார். கிமார் ரோச்சை எல்.பியில் வீழ்த்தியதன் மூலம் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

75/8 என்ற நிலையிலிருந்துதான் வாரிகன் (41), அம்ப்ரீஸ் (43) என்று ஸ்கோரை 138க்கு எடுத்துச் சென்றனர். அப்போது  மெஹதி பந்தில் வாரிகன் அவுட் ஆக, சுனில் அம்ப்ரீஸ் தவறான நடுவர் தீர்ப்புக்கு கடைசி விக்கெட்டாக தைஜுலிடம் வீழ்ந்தார், மே.இ.தீவுகள் 139 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி கண்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close