[X] Close

‘பெரிய்ய’ மாற்றம்: ஐசிசியைக் கடுமையாகக் கிண்டல் செய்த மைக்கேல் வான்


vaughan-criticizes-icc

முன்னாள் இங்கி. கேப்டன், மைக்கேல் வான்.| ராய்ட்டர்ஸ்.

  • kamadenu
  • Posted: 24 Nov, 2018 17:47 pm
  • அ+ அ-

ஐசிசி உலக டி20 என்பதை ஐசிசி டி20 உலகக்கோப்பை என்று பெயர் மாற்றியிருப்பதாக ஐசிசி நேற்று அறிவித்தது, இந்த ‘மார்க்கெட்டிங்’ உத்தியை பல கேப்டன்களும் பாராட்டியிருந்தனர்.

அதாவது உலகக்கோப்பை டி20 என்று அழைக்கும் போது 50 ஒவர் உலகக்கோப்பை, டெஸ்ட் போன்றவற்றிற்கு அளிக்கப்படும் மரியாதை, மதிப்பு டி20 கிரிக்கெட்டுக்கும் கிடைக்கும் என்று ஐசிசி பெயர் மாற்ற அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இதற்கு டுபிளெசிஸ், விராட் கோலி உள்ளிட்ட கேப்டன்கள் வரவேற்பு அளித்திருந்தனர், ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுக்கு இந்த மாற்றம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் “இத்தனையாண்டுகளில் நான் கேள்விப்பட்ட சிறந்த செய்தி இதுதான்... இது என்னை மிகவும் பாதித்துள்ளது!!!!!!!!!!!!!!! , என்ன ஒரு மிகப்பெரிய மாற்றம் ........” என்று கடுமையாகக் கிண்டலடித்துள்ளார்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close