[X] Close

உலக டி20 கிரிக்கெட் பெயர் மாற்றப்படுகிறது: ஐசிசி அறிவிப்பு; கேப்டன்கள் வரவேற்பு


name-changed-for-t20-cricket

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 20:54 pm
  • அ+ அ-

உலக டி20 சர்வதேசப் போட்டித் தொடரின் பெயரை மாற்றுவதன் மூலம் அதற்கு இன்னும் மதிப்பு கூடி ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, டெஸ்ட் போன்ற ஒரு தன்மை கிடைக்கும் என்று ஐசிசி முடிவெடுத்துள்ளது.

இதனையடுத்து உலக டி20 கிரிக்கெட் 2020 தொடர் முதல் டி20 உலகக்கோப்பை என்றே அழைக்கப்படும் என்று ஐசிசி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

“2020-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 போட்டிகள் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2020 என்றும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை 2020 என்றும் அழைக்கப்படும். பெயரை மாற்றுவதன் மூலம் சர்வதேச போட்டி அட்டவணையில் இந்த நிகழ்வுக்கு முக்கியத்துவத்தை உறுதி செய்வதே. அனைத்து வடிவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு சர்வதேச அணிகளின் கேப்டன்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர், 2020 ஐசிசி டி20 உலகக்கோப்பையே தனது கடைசி ஐசிசி போட்டி பங்கேற்பு என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் தெரிவித்திருந்தார்.

விராட் கோலியும் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர், அதாவது உலகக்கோப்பை என்பது அனைவரது கனவாகும் என்று கேப்டன்கள் தெரிவிக்கின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close