[X] Close

ஹர்பஜனிடம் வாங்கிய அறை : ‘பிக் பாஸில்’ மனம் திறந்த ஸ்ரீசாந்த்


sreesanth-speaks-about-harbhajan

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 18:45 pm
  • அ+ அ-

இந்தி பிக்பாஸ் சீசன் 12 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஐபில் போட்டியில் ஹர்பஜன் அறைந்த சம்பவத்தை பகிர்ந்துக் கொண்டார்.

இந்தி 'பிக் பாஸ்' சீசன் 12-ல் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டிருக்கிறார்.

உலக அளவில் பிரபலமான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி,  இந்தியாவில் இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதில் பாலிவுட் நடிகர்  சல்மான் கான் தொகுப்பாளராக, கடந்த பத்து வருடங்களாக நடத்தி வரும் இந்தி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 12-வது சீசன் இந்த வாரம் தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு பிரபலங்களுடன் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டிருக்கிறார்.

இதில் ஐபிஎல்லில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பஞ்சாப் மும்பை போட்டியின் போது ஹர்பஜன் சிங் அறைந்த நிகழ்வை ஸ்ரீசாந்த் பகிர்ந்து கொண்டார்.

அதில், ‘‘மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றப் பிறகு நான் ஹர்பஜனை சீண்டும் சொற்களை கூறி இருக்கக் கூடாது அதுதான் அவரை கோபமடைய செய்தது.

இருப்பினும் நான் ஹர்பஜன் மீது  மரியாதை வைத்திருக்கிறேன். அந்த சம்பவத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்து கொண்டு எங்களுக்கு இடையே இருந்த பிரச்சனையை தீர்த்து கொண்டோம்’’ என்று கூறினார்.

இந்த பகுதி வியாழக்கிழமை ஒளிப்பரப்பானது. இதனைத் தொடர்ந்து ‘பிக் பாஸ்’ பார்வையாளர்களிடம் ஸ்ரீசாந்த்க்கு ஆதரவு பெருகி வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close