[X] Close

2-வது டி20 போட்டி: டாஸ் வென்றார் கோலி; ஆஸி. அணியில் மாற்றம்


kohli-wins-toss-in-2t20

மெல்பர்ன் மைதானத்தில் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த காட்சி : படம் உதவி: ட்விட்டர்

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 13:45 pm
  • அ+ அ-

மெல்பர்னில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றார்.

டாஸ்வென்ற கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. மெல்பர்னில் இன்று 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

மெல்பர்னில் இன்று நண்பகலுக்குப் பின் மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மழை நின்றதையடுத்து, மைதானத்தைச் சீரமைத்து, தண்ணீரை வெளியேற்றும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆதலால், குறித்த நேரத்தில் போட்டி தொடங்குவதில் சிக்கல் ஏதும் இருக்காது.

பிரிஸ்பேனில் நடந்த முதல்போட்டியில் மழை காரணமாக 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அந்த போட்டியில் இந்திய அணி சேஸிங் செய்து சிறப்பாக பேட் செய்தபோதிலும் 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதனால், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று ஆஸ்திரேலியா முன்னணியில் இருக்கிறது. தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தப் போட்டியில் இந்தியஅணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸ் வென்றது குறித்து விராட் கோலி கூறுகையில் “ கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இந்த ஆட்டத்திலும் பங்கேற்கிறார்கள். மாற்றம் ஏதும் இல்லை” எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ''டாஸ் வென்று இருந்தால், நிச்சயம் நான் பந்துவீச்சை தேர்வு செய்து இருப்பேன். அணியில் பில்லி ஸ்டேன் லேக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளது ஆதலால், அவருக்குப் பதிலாக நாதன் கோல்டர் நீல் சேர்க்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.

ஆட்டம் தொடங்கியவுடன் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து கேப்டன் பிஞ்ச் டக்அவுட்டில் வெளியேறினார்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குர்னல் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜூவேந்திர சாஹல், கலீல் அகமது, புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸி. அணி விவரம்:

ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), ஷார்ட், லின், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், மெக்டார்மட்கேரே, ஆன்ட்ரூ டை, பெஹ்ரென்டார்ப், ஜம்பா, நாதன் கோல்டர் நீல்

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close