[X] Close

ஆஸ்திரேலியாவுடன் இன்று 2-வது டி20 ஆட்டம்: தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி


india-vs-australia-second-t20-today

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 09:58 am
  • அ+ அ-

இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2-வது சர்வதேச டி20 கிரிக்கெட் ஆட்டம் மெல்போர்னில் இன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

இந்திய அணி தற்போது ஆஸ்தி ரேலியாவில் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. பிரிஸ்பனில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் 2-வது ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

முதல் ஆட்டத்தில் இந்திய அணி, வெற் றிக்கு மிக அருகில் வந்து வாய்ப்பை நழுவவிட் டது. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் நோக்கில் இந்திய அணியினர் தயாராகியுள்ளனர்.

ஏற்கெனவே தொடர்ந்து 7 டி20 தொடர் களை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியுள்ளது. எனவே இந்தத் தொடரையும் வென்று 8-வது தொடரை கைப்பற்ற இந்திய அணி ஆயத்தமாகி உள்ளது. முதல் போட்டியில் சரியாக விளையா டாமல் போன ரோஹித், கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர் 2-வது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். முதல் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி அரை சதமடித்த ஷிகர் தவணிடமிருந்து மற்றுமொரு சிறந்த இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம். ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகி யோரும் அணிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

முதல் போட்டியில் கிருணல் பாண்டியா அதிக ரன்களை வாரி வழங்கினார். விக்கெட்டும் எடுக்க வில்லை. அந்த இழப்பை 2-வது போட்டியில் சரிசெய் வார் என எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில் மெல்போர்ன் மைதானம் என்பதால் கிருணலுக்குப் பதிலாக லெக் ஸ்பின்னரான யுவேந்திர சாஹலுக்கு, கோலி வாய்ப்பளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதேபோல முதல் போட்டியில் கலீல் அகமதுவும் ரன்களை அதிகம் விட்டுக்கொடுத்தார். எனவே பந்துவீச்சாளர்களில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.

ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, குல்தீப் யாதவ் கூட்டணி 2-வது ஆட்டத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் உள்ளூர் மைதானத்தில் உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. ஏற்கெனவே 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளதால் அந்த அணிக்கு எந்த அழுத்தமும் இருக்காது.

ஆரோன் பிஞ்ச், கிளென் மேக்ஸ்வெல், டிஆர்சி ஷார்ட், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், கிறிஸ் லின், பென் மெக்டார்மெட் ஆகியோர் பேட்டிங்கையும், ஆன்ட்ரூ டை, பெஹ்ரன்டார்ப், ஸ்டான்லேக், ஆடம் ஜம்பா ஆகியோர் பந்துவீச்சையும் கவனித்துக் கொள்வார்கள். முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணியே 2-வது போட்டியிலும் களமிறங்கும் எனத் தெரிகிறது.

இந்தியா: விராட் கோலி கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், கிருணல் பாண்டியா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தர்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஜேசன் பெஹ்ரன்டார்ப், அலெக்ஸ் கேரே, நாதன் கவுல்ட்டர் நைல், கிறிஸ் லின், பென் மெக்டார்மெட், கிளென் மேக்ஸ்வெல், டிஆர்சி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஆன்ட்ரூ டை, ஆடம் ஜம்பா.

நேரம்: பிற்பகல் 1.20 நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி டென் 3அணி விவரம்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close