[X] Close

16 பந்துகளில் 74 ரன்கள்: டி10 போட்டியில் பொளந்துகட்டிய ஆப்கன் வீரர் முகமது ஷாசாத்


superb-cricket-from-afgan-team

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாசாத்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 14:23 pm
  • அ+ அ-

துபாயில் நடந்து வரும் டி10 கிரிக்கெட் போட்டியில் ராஜ்புத் அணி சார்பில் விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாசாத் 16 பந்துகளில் 74 ரன்கள் விளாசி 10 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெறச் செய்தார்

போட்டியைக் காணவந்த ரசிகர்கள் ஆட்டம் முடியும் வரை வானத்தையே பார்க்கும் அளவுக்குப் பந்துகள் சிஸ்கருக்கு பறந்தவாறு இருந்தன.

துபாயில் டி10 கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது. 10 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் இந்தப் போட்டியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னணி வீரர்கள், முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஷேன் வாட்ஸன் தலைமையிலான சிந்தி அணியும், மெக்கலம் தலைமையிலான ராஜ்புத் அணியும் மோதியது.

முதலில் பேட் செய்த சிந்தி அணி 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷேன் வாட்ஸன் 20 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். ராஜ்புத் அணியின் பந்துவீச்சாளர் முனாப் படேல் 2 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

10 ஓவர்களில் 95 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன், ராஜ்புத் அணி 4 ஓவர்களில் 95 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்கள் நியூசிலாந்தின் மெக்கலம், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாசாத் களமிறங்கினார்கள்.

முகமது ஷாசாத் இந்த அடி அடிப்பார் என்று மெக்கலமே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். களத்தில் இறங்கிய முகமது ஷாசாத், ஒவ்வொரு பந்தையும் பொளந்து கட்டிவிட்டார். தான் சந்தித்த எந்தப் பந்தையும் அடிக்காமல் டாட் பந்துகளாக முகமது ஷாசாத் விடவில்லை. ஒவ்வொரு பந்தும் சிக்ஸர் அல்லது பவுண்டரிக்கு அனுப்பப்பட்டன.

முதல் ஓவரில் மெக்கலம் ஒரு பந்தை வீணாக்கி, 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்த 4 பந்துகளைச் சந்தித்த முகமது, 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார்.

2-வது ஓவரில் மெக்கலம் 2 சிக்ஸர்களும், முகமது 2 சிக்ஸர்களும் அடித்தனர். 3-வது ஓவரில் முகமது 12 பந்துகளில் முகமது ஷாசாத் அரை சதத்தை எட்டினார். 12 பந்துகளில் அரை சதத்தை இதுவரை யுவராஜ் சிங், கெயில் மட்டுமே எட்டி இருந்தனர். 3-வது நபராக முகமது ஷாசாத் இடம் பிடித்துள்ளார். 3-வது ஓவரில் மட்டும் ஷாசாத் 3 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடித்தார். 4-வது ஓவரையும் அடித்து நொறுக்கிய ஷாசாத் அணியை 4 ஓவர்களில் வெற்றி பெற வைத்தார்.

முகமது ஷாசாத் 16 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். மெக்கலம் 8 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close