[X] Close

பிசிசிஐ பேச்சைக் கேட்காமல் மீறல்: ரஞ்சி போட்டியில் வீசித்தள்ளிய மொகமது ஷமி


mohammed-sami-bowling-at-ranchi-match

கேரளாவுக்கு எதிராக விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷமி. | பிடிஐ.

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 11:21 am
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் காயமடையாமல் பவுலிங் வீச வேண்டும் என்பதற்காக ரஞ்சி போட்டியில் 15 ஒவர்களுக்கு மேல் வீசக்கூடாது என்று பிசிசிஐ போட்டிருந்த உத்தரவை ஷமி மீறினார்.

ஆஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்புகள் அதிகம் பிட்ச் ஹார்டாக இருக்கும் என்பதால் பவுலர்கள் காலைத் தூக்கி முன்னால் வைத்து வீசும்போது தொடை சதை, கெண்டைக்கால் சதை, கணுக்கால் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

இதனையடுத்து ரஞ்சி போட்டிகளில் 15 ஒவர்களுக்கு மேல் வீச வேண்டாம் என்று பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது, ஆனால் கேரளாவுக்கு எதிராக ஆடிவரும் பெங்கால் அணிக்கு ஆடும் ஷமி 26 ஓவர்களை வீசி 3 மெய்டன்களுடன் 100ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிசிசிஐ பேச்சை மீறிய மொகமது ஷமி தன்னுடைய செயல் குறித்துக் கூறியபோது, “நம் மாநில அணிக்கு ஆடும்போது, நாம் நம் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது, பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

நான் என் உடல் நிலை நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன், பிரச்சினையில்லை, பிட்சும் நன்றாக இருந்தது, அதனால் என்னால் முடிந்தவரை வீசுவோம் என்று வீசினேன். இது நானே எடுத்த முடிவு

மாநில அணிக்கு ஆடுவதுதான் சிறந்தது..  வேறெங்கோ பயிற்சி செய்வதற்குப் பதில் மாநில அணிக்காகக் களத்தில் இறங்குவதுதான் சிறந்த பயிற்சி. இங்கு அதிகம் வீச வீச ஆஸ்திரேலியாவில் உதவும், இது நல்ல தயாரிப்பு, என்னைப் பொறுத்தவரையில் ஒரு போட்டியில் ஆடுவதுதான் சிறந்தத் தயாரிப்பு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் சொந்த மண்ணில் வீசுகிறேன், என் நண்பர்கள் இங்குதான் உள்ளனர். என் அணியுடன் நீண்ட காலத்துக்குப் பிறகு ஆடுகிறேன்.

இதுதான் நல்ல தயாரிப்பு, நான் ஆஸ்திரேலியா டெஸ்ட்களுக்குத் தயாராகவே இருக்கிறேன்.

இவ்வாறு கூறினார் மொகமது ஷமி.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close