[X] Close

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: புதுமுக தொடக்க வீரருடன் ஆஸி. அணி அறிவிப்பு


autraliacricket

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 09:55 am
  • அ+ அ-

 

இந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விக்டோரியாவைச் சேர்ந்த தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் முதல் முறையாக தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எப்போதும் 12 வீரர்கள் கொண்ட அணியையே ஆஸ்திரேலியா அறிவிக்கும், ஆனால் இம்முறை 14 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட் ரென்ஷா மீண்டும் அணிக்குள் நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களான கிறிஸ் ட்ரிமெய்ன் மற்றும் பீட்டர் சிடில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2010-ல் ஆஷஸ் தொடருக்கு 17 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இப்போது 14 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இல்லையெனில் வழக்கமாக 12 வீரர்கள் கொண்ட அணியைத்தான் அறிவிக்கும்.

மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பாட் கமின்ஸ், நேதன் லயன் ஆகிய 4 பவுலர்கள்தான் டெஸ்ட் போட்டியில் ஆடுவார்கள் என்ற நிலையில் கூடுதலாக இரு வேகப்பந்து வீச்சாளர்களையும் தேர்வு செய்திருப்பதும் இன்னொரு புதிய அதிர்ச்சி.

மார்கஸ் ஹாரிஸ், ரென்ஷாவை விட முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளார், ரென்ஷா 2வது ஆண்டாகத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் மிடில் ஆர்டரை வலுப்படுத்த சேர்க்கப்பட்டுள்ளார். ட்ராவிஸ் ஹெட்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அடிலெய்ட் மற்றும் பெர்த் டெஸ்ட் போட்டிகளுக்கு இந்த 14  வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.  காயத்திலிருந்து மீண்ட உஸ்மான் கவாஜா அணியில் இடம்பெற்றுள்ளார்.

மார்கஸ் ஹாரிஸ் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் வெளுத்துக் கட்டியுள்ளார், 2 சீசன்களில் 1,514 ரன்களை எடுத்துள்ளார், இதில் நியூசவுத்வேல்ஸ் அணிக்கு எதிராக 250 ரன்களைக் குவித்திருக்கிறார்.

ஆஸி. அணி விவரம்:

மார்கஸ் ஹாரிஸ், ஏரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டிம்பெய்ன், பாட் கமின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன், கிறிஸ் ட்ரிமெய்ன், பீட்டர் சிடில், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close