[X] Close

இந்தியா - ஆஸ்திரேலியா டி 20-ல் இன்று மோதல்


india-meets-australia-in-first-t20

  • kamadenu
  • Posted: 21 Nov, 2018 12:21 pm
  • அ+ அ-

இந்தியா - ஆஸ்திரேலியா அணி கள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் பிரிஸ்பனில் இன்று நடை பெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்தி ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டி 20 ஆட்டங்கள், 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் டி 20 தொடரின் முதல் ஆட்டம் பிரிஸ்பன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.

இந்திய அணி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை 7 டி 20 தொடர்களை கைப் பற்றியுள்ளது. மேலும் கடந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் டி 20 தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 வென்றிருந் தது. இதனால் மிகுந்த நம்பிக் கையுடனும், சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாகவும் தொடங்கும் முனைப்பில் விராட் கோலி குழுவினர் உள்ளனர்.

மாறாக கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத் தில் பந்தை சேதப்படுத்திய விவகா ரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி இன்னும் அதில் இருந்து மீண்டுவர முடியாமல் கடும் சோதனைகளை சந்தித்து வருகிறது. ஓராண்டு கால தடையால் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக தோல்விகளை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் ஆஸ்திரேலிய அணி இதுவரை ஒரு டி 20 தொடரை கூட வெல்ல வில்லை.

ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டி 20 ஆட்டம் கொண்ட தொடர், ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி 20 தொடர் இறுதி ஆட்டம், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் 0-3 என ஒயிட்வாஷ் அதன் பின்னர் சொந்த மண்ணில் தென் ஆப்பிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு டி 20 ஆட்டம் கொண்ட தொடரில் தோல்வி என நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஆஸ்திரேலிய அணி.

அணியின் மறுகட்டமைப்பு இன் னும் முழுமைபெறாத நிலையிலும், தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டுள்ள ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் வலுவான இந்திய அணியை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை காண கிரிக் கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு உள்ள ஒரே சாதகமான விஷயம் சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவது தான்.

எப்போதும் அந்த அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தக் கூடியது. இதனால் அந்த அணி தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தக்கூடும். இந்திய அணியை பொறுத்தவரையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு எடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் திரும் பியுள்ளார் விரார் கோலி. அவரது வருகை அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

தற்கால கிரிக்கெட்டில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படும் விராட் கோலியை, ஒரு கேப்ட னாக ஆரோன் பின்ச் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விராட் கோலி 199 ரன்கள் குவித்திருந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ரன்கள் வேட்டையாடும் திறனை விராட் கோலி கொண்டிருப்பதால் இம் முறையும் அவர், கடும் சவால் கொடுப்பார்.

விராட் கோலி அணிக்கு திரும்பியிருப்பதன் மூலம் கே.எல்.ராகுல் அல்லது யுவேந்திரா சாஹல் நீக்கப்படக்கூடும். கே.எல். ராகுல் சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் 3 இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 59 ரன்களே சேர்த்தார். எனினும் நேற்று பிசிசிஐ அறிவித்த 12 பேர் கொண்ட பட்டிய லில் கே.எல்.ராகுல் இடம் பெற்றி ருந்தார். இதனால் விளையாடும் லெவனில் அவர் இடம் பெறுவ தற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், கிருணல் பாண்டியா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது.

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (கேப்டன்), அஷ்டன் அகர், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், அலெக்ஸ் காரே, நாதன் கவுல்டர் நைல், கிறிஸ் லின், பென் மெக்டெர்மோட், கிளென் மேக்ஸ்வெல், டி’ஆர்சி ஷார்ட், பில்லி ஸ்டேன்லேக், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆன்ட்ரூ டை, ஆடம் ஸம்பா.

நேரம்: பிற்பகல் 1.20

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி டென் 3

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close