[X] Close

விளையாட்டு என்பது ‘பேங்க் பேலன்ஸ்’ பற்றியதல்ல: சச்சின் டெண்டுல்கர் அறிவுரை


sachin-speech-at-chidrens-day-special-function

புதுடெல்லி நிகழ்ச்சியில் சச்சின். | படம்: சந்தீப் சக்சேனா.

  • kamadenu
  • Posted: 20 Nov, 2018 20:23 pm
  • அ+ அ-

பள்ளிப் பாடத்திட்டத்தில் விளையாட்டுப் பாடத்தையும் இணைக்க வேண்டும் என்று பேசி வரும் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ‘உலக குழந்தைகள் தினம்’ கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் டெல்லியில் மாணவர்களுடனான குழு விவாதம் ஒன்றில் தெரிவித்தார்.

யுனிசெஃப் பிராண்ட் தூதரான சச்சின் டெண்டுல்கர் மேலும் கூறும்போது, “விளையாட்டிற்கு தோலின் நிறம் தெரியாது, உங்கள் பேங்க் பேலன்ஸ் தெரியாது, ஆண்/பெண் பேதமும் அறியாதது. விளையாட்டிற்கு பாகுபாடு கிடையாது, இதுதான் குழந்தைகளுக்குச் சிறந்தது. ஒட்டுமொத்த வளர்ச்சியில் விளையாட்டிற்கு தனி பங்கு உண்டு.

எனக்கு சிறுவயது முதலே விளையாட்டு என்றாலே உற்சாகம்தான், பள்ளியில் அது நம் அழுத்தங்களைக் குறைப்பது, நான் டேபிள் டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து என்று நிறைய விளையாட்டுகளை ஆடுவென். களத்தில் நான் கற்றுக்கொண்ட பாடங்களை களத்துக்கு வெளியேயும் நான் நடைமுறைப்படுத்துவேன்.

நாம் நம்மை எப்படி நம்மை வழிநடத்துகிறோம் என்பதுதான் அனைத்தும், ஒரு பேட்ஸ்மென் பேட் செய்யப் போகும் போது அந்த 22 யார்டு முக்கியம், அதே போல் பள்ளிக்குழந்தைகளுக்கு முடிவெடுப்பதிலும், பொறுப்புணர்விலும் வழிநடத்தும் மனோபாவம் முக்கியம்.

அச்சமின்றி இருக்க வேண்டும் அக்கறையின்றி அல்ல. உங்கள் ஆசிரியர்கள் உங்களை வழிநடத்துவார்கள். ஓயவறையில் நல்ல தனிமனிதர்கள் நல்ல அணியை உருவாக்குகின்றனர். விளையாட்டும், கல்வியும் ஒன்று சேர்ந்து பயணித்தால் அது ஒத்திசைவை உருவாக்கும். அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுக் கல்வி அவசியம், கட்டாயம்.

அமைதியுடனும் சாந்தமாகவும் இருப்பது பலவீனம் அல்ல, அது பெரிய பலம்.

இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close