[X] Close

ஆஸ்திரேலியாவின் சவாலுக்கு நாங்கள் தயார்: இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா அறிவிப்பு


rohit-sharma-about-australian-tour

ரோஹித் சர்மா.

  • kamadenu
  • Posted: 20 Nov, 2018 11:41 am
  • அ+ அ-

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி யின் சவாலுக்கு நாங்கள் தயார் என்று இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 4 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக் கெட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா வந்துள்ளது. முதல் டி20 ஆட்டம் பிரிஸ்பேனில் நவம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தொடர் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் ரோஹித் சர்மா கூறியதாவது:

ஆஸ்திரேலியத் தொடர் எங்க ளுக்குச் சவாலாக இருக்கும் என்ப தில் சந்தேகமில்லை. ஆஸ்திரேலிய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பவுலர்கள் உள்ளனர். மேலும் உள்ளூர் மைதானங்களில் விளையாடுவதால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கள் இயல்பாகவே உயரம் அதிக மானவர்களாக உள்ளனர். அது அவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனாலும் ஆஸ்திரேலியாவின் சவாலை நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இந்திய பந்துவீச்சாளர்களும், பேட்ஸ்மேன் களும் அந்த அளவுக்கு உயரம் இல்லை. எனவே இந்திய வீரர் களுக்கு எதிரணி பந்துவீச்சை சமாளிப்பது சிரமம்தான். அது கடினமான வேலையும்கூட. இருந்த போதிலும் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள நாங் கள் தயாராகிவிட்டோம்.

எதிரணி சவாலை ஏற்று விளை யாட இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி யில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதுள்ள இந்திய அணியில் உள்ள வீரர்கள் பலர், ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். எனவே இங்குள்ள நிலைமையை அறிந்து அதற்கேற்ப விளையாடுவர்.

கடந்த முறை ஆஸ்திரேலியா வில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது 2 போட்டிகளில் தோல்வி கண்டோம். ஒரு போட்டியை டிரா செய்தோம். சில போட்டிகளில் வெற்றி வரை நெருங்கிச் சென் றோம். குறிப்பாக பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்றோம். இந்தத் தொடரை 2019 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதான முக்கியமான தொடராகப் பார்க்கிறோம்.

ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்தி ரேலிய அணியை எதிர்கொள்வது நிச்சயம் சவால்தான். எனவே இங்கு விளையாடும்போது முழு அணி வீரர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்த வேண் டும் என முடிவு செய்துள்ளோம்.

இந்திய அணியில் தரமான பந்துவீச்சாளர்கள் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ள னர். அதைப் போலவே பேட்டிங் கும் சிறந்த வரிசையைக் கொண்டுள் ளது. டெஸ்ட் தொடரில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

இந்த ஆண்டில் டி20 போட்டி களில் 2 சதங்களை விளாசி யுள்ளேன். 3-வது சதத்தை விளாச ஆவலாக உள்ளேன். நான் என்னு டைய பாணி ஆட்டத்தை எப்போ துமே வெளிப்படுத்துவேன். எப்போ தும் களத்தில் எளிமையுடன் நுழைந்து ஆட்டத்தை என் கையில் எடுப்பேன். வரும் போட்டிகளிலும் அதையேதான் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுவரை ஆஸ்திரேலியாவில் 11 டெஸ்ட் தொடர்களில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் 8 முறை தோல்வியும், 3 முறை டிராவும் செய்துள்ளது இந்தியா. ஒரு தொடரைக் கூட இந்தியா இதுவரை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -

‘கோலி, ரோஹித்தை கட்டுப்படுத்த வியூகம்’

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அணி வியூகம் வகுத்துள்ளது என்று அந்த அணி வீரர் நாதன் கவுல்ட்டர் நைல் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று அவர் கூறும்போது, “இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, தவண் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களில் விராட் கோலி அபாயகரமானவர். அதைப் போலவே மற்றொரு நம்பிக்கைக்குரிய வீரராக ரோஹித் சர்மா உள்ளார். அவரது சாதனைகள், ரன் குவிப்பைப் பார்த்தாலே அவரைப் பற்றி புரிந்துகொள்ளலாம். அவர் ஏராளமான சாதனைகளைத் தன்னிடம் வைத்துள்ளார். அவரது ஆட்டம் சிறப்பானதாக இருக்கும். அவரது ஆட்டத்தைக் கவனிக்க வேண்டியது அவசியம். எனவே அவரது விக்கெட் எங்களுக்கு முக்கியம்.

எனவே விராட் கோலி, ரோஹித்தை வீழ்த்துவதற்கு வியூகம் வைத்துள்ளோம். ஏற்கெனவே ரோஹித்தை பலமுறை வீழ்த்தியிருக்கிறோம். புதிய பந்துகளில் அவரைச் சாய்த்துள்ளோம். இந்த முறையும் அதுபோன்ற வியூகத்தைச் செயல்படுத்துவோம்” என்றார்.

கடந்த 8 ஆண்டுகளில் 62.31 சராசரியில் 810 ரன்களை ஆஸ்திரேலியாவில் எடுத்துள்ளார் ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close