[X] Close

விராட் கோலிக்கு மெமோவா? - மறுத்தது கிரிக்கெட் வாரியம்


bcci-rubbishes-media-reports-on-coa-s-memo-to-kohli

கோப்புப் படம்: பிடிஐ

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 19 Nov, 2018 13:28 pm
  • அ+ அ-

நிர்வாகிகள் குழு சார்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மெமோ கொடுக்கப்படதாக வந்த செய்திகளை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

சமீபத்தில், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை பிடிக்குமென்றால் இந்தியாவில் இருக்கக்கூடாது என்று விராட் கோலி ஒரு ரசிகருக்கு பதிலளித்திருந்தார். அவரது இந்த பதில் பெரும் சர்ச்சையானது. 

முன்னதாக இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணங்களில் கூட, பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி பதில் சொன்ன விதமும் கடும் விமர்சனங்களுக்குள்ளானது. விராட் கோலி இன்னும் பக்குவத்துடனும், தன்னடக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என பலர் அவருக்கு அறிவுறுத்தினர்.

இந்த நிலையில், இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. அங்கு விராட்கோலி பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் குழு சார்பாக அவருக்கு மெமோ (குறிப்பாணை) தரப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டது.

இது குறித்து பிசிசிஐ தரப்பு, "'அடக்கமாக இருங்கள்: விராட் கோலிக்கு நிர்வாகிகள் குழு மெமோ' என்ற தலைப்பில் மும்பையைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்றில், நவம்பர் 17, 2018 அன்று ஒரு செய்தி வந்துள்ளது. அணி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பின், இந்த செய்தி உண்மையற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 21-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் ஆரம்பமாகவுள்ளது. 

- ஏ.என்.ஐ

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close