[X] Close

ஹர்திக் பாண்டியா இல்லாதது இந்திய அணிக்கு குறை: தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து


hardik-pandiya

  • kamadenu
  • Posted: 19 Nov, 2018 10:52 am
  • அ+ அ-

பிரிஸ்பேன்

இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாதது குறைதான் என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

4 டெஸ்ட், 3 டி20, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா வுக்கு வந்துள்ளது. இந்த நிலை யில் நேற்று பிரிஸ்பேனில் செய்தி யாளர்களிடம் தலைமைப் பயிற்சி யாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

2018-ம் ஆண்டில் வெளிநாடு களில் நடைபெற்ற 2 டெஸ்ட் தொடர் களை இந்தியா இழந்தது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் இந்தியா தோல்வி கண்டது. இந்தத் தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். தோல்விகளில் இருந்து மீள் வோம்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத் தில் ஆஸ்திரேலிய அணி பெரும் பின்னடைவை கடந்த சில மாதங் களாக சந்தித்துள்ளது என்று கூறு வதை ஏற்க முடியாது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலிய ஆடு களங்களில் பந்துவீசுவதில் மகிழ்ச் சியாக இருப்பார்கள். ஹர்திக் பாண் டியா இல்லாதது அணிக்கு குறை தான். அவர் காயமடைந்ததால் அணிக்குள் வரமுடியவில்லை. அவர் இல்லாதது எங்களுக்கு வருத் தம் அளிக்கிறது. அவர் அணியில் இருந்தால், அணியில் ஒரு கூடுதல் பேட்ஸ்மேனும், கூடு தல் பந்துவீச்சாளரும் இருப்பதை ஈடுகட்டுவார். அவர் இருந்தால் அணிக்கு கூடுதல் பலமாக இருக் கும். விரைவில் அவர் உடல் தகு தியை எட்டுவார் என நம்பு கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர ர்கள், வாய்த்தகராறில் ஈடுபடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது ரவி சாஸ்திரி அளித்த பதில்:

எதிரணி வீரர்களின் சீண்டல் கள் குறித்து நாங்கள் கவலை அடையவில்லை. நல்ல கிரிக்கெட் விளையாட நாங்கள் இங்கு வந்துள் ளோம். கிரிக்கெட் விளையாட்டின் தரத்தைப் பொறுத்து இந்த தொட ரின் வெற்றி தோல்வி அமையும்.

ஆஸ்திரேலியாவில் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளை யாடி வருகிறார். 2011-12- தொடரின் போது ஒரு சதமும், 2014-15 தொடரின்போது 4 சதங்களும் அவர் எடுத்தார். அவர் மிகத் திறமையான வீரர். ஆஸ்திரேலியாவில் விளை யாடுவதை அவர் மிகவும் விரும்பு கிறார். அதைவிட அவர் கிரிக் கெட்டை அதிகம் நேசிக்கிறார். இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close