[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 10 Nov, 2018 07:48 am
  • அ+ அ-

மேஷம்: மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற உறுதியுடன் செயல்படுவீர்கள்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் காரியங்களைச் செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். 

கடகம்: முக்கிய வேலைகளை தாமதமின்றி முடிப்பீர்கள். உறவினரில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். பிரார்த்தனையைக் குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கல்களைத் தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். 

கன்னி: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: சின்னச் சின்னக் கவலைகள் வந்து நீங்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

தனுசு: வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உணவில் காரம், வாயு பதார்த்தங் களைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர் வகையில் தர்மசங்கடமான சூழல் ஏற்படும்.

மகரம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வீடு, வாகனம் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

மீனம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். புண்ணியத் தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close