[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 09 Nov, 2018 09:12 am
  • அ+ அ-

மேஷம்:  பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது. திடீர் பயணம் ஏற்படும்.

ரிஷபம்: நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். தெலுங்கு, மலையாளம் பேசுபவர்கள் உதவுவார்கள். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய வழி பிறக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தீரும்.

கடகம்: விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

சிம்மம்: கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். சில விஷயங்களில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். திட்டமிட்ட காரியம் சிறப்பாக நிறைவேறும். வீடு வாங்குவது நல்ல விதத்தில் முடியும்.

கன்னி: திடீர் திருப்பங்கள் ஏற்படும். பிரபலமானவர் அறிமுகமாவார். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

துலாம்: பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தேக்க நிலை மாறும்.

விருச்சிகம்: முன்கோபம் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். யாருக்கும் சாட்சி, உத்தரவாதக் கையெழுத்துப் போட வேண்டாம். 

தனுசு: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். தூக்கம் குறையும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும். வீடு, வாகனம் செலவு வைக்கும்.

மகரம்: புகழ், கவுரவம் உயரும். புது வேலை அமையும். அரசால் ஆதாயம் உண்டு. பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

கும்பம்:  புதுப் பொறுப்புகளுக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மீனம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். முக்கிய முடிவுகளைத் தள்ளிப் போடாமல் உடனடியாக எடுப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close