[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 09:18 am
  • அ+ அ-

மேஷம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். என்றாலும் மாலை முதல் எதிலும் நிதானம் தேவை.

ரிஷபம்:  புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: பழைய நண்பர்கள் மூலம் உதவியுண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

கடகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத் தினரின் ஆசாபாசங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் வரும்.

சிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கன்னி: தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள்.

துலாம்: எதிர்காலத்தைப் பற்றிய பயம் வரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கவனியுங்கள். மாலை முதல் தொட்டது துலங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கொள்வீர்.

விருச்சிகம்: வீண் செலவு, அலைச்சல் வரும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். அக்கம், பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம்.

தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளை களால் பெருமையடைவீர்கள்.

மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங் களைச் செயல்படுத்திக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

மீனம்: மனப்போராட்டம், ஒருவித பயம் இருக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. ஆனால் மாலை முதல் மகிழ்ச்சி தொடங்கும்.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close