[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 08:42 am
  • அ+ அ-

மேஷம்: பழைய வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கிவர வாய்ப்பு உள்ளது. 
**
ரிஷபம்: போட்டி, சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் கூடிவரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு, கடையை விரிவுபடுத்தி கட்டுவது நல்லபடியாக முடியும்.
**
மிதுனம்: கடந்த காலத்தில் நடந்த இனிய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள். பெற்றோருடன் கருத்து மோதல் வந்து நீங்கும். பயணத்தில் நிதானம் தேவை.
**
கடகம்: பிரச்சினைகளை சமாளிக்க நல்ல வழி பிறக்கும். வேற்றுமொழி பேசுபவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். புதிய நண்பர்களால் அனுகூலம் உண்டு.
**
சிம்மம்: பணத் தட்டுப்பாடு குறைந்து, தேவையான அளவு பணம் வரும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள்.
**
கன்னி: மருத்துவர் ஆலோசனையின்றி மருந்து உட்கொள்ளக் கூடாது. ஆன்மிக நாட்டம் கூடும். பல வகையிலும் பணவரவு, பொருள் வரவு உண்டாகும். பேச்சில் நிதானம் தேவை.
**
துலாம்: தவிர்க்க முடியாத செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும். சகோதர வகையில் அன்புத் தொல்லை அதிகமாகும். அரசு காரியங்கள் சற்று இழுபறியாகும்.
**
விருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். பங்குச்சந்தை மூலமாகவும் ஆதாயம் அடைவீர்கள். மனைவி ஆதரவாகப் பேசுவார். மனைவிவழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
**
தனுசு: சமுதாயத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் போன்ற சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். 
**
மகரம்: நம்பிக்கை, உற்சாகம் பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
**
கும்பம்: இரவுப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவரை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து, அதற்கேற்ப செயல்படுவது அவசியம்.
**
மீனம் உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் உதவி உண்டு.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close