[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 08:38 am
  • அ+ அ-

மேஷம்: சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காகச் செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பண வரவு திருப்தி தரும்.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும்.

மிதுனம்: முக்கிய பிரச்சினைக்கு புதிய அணுகுமுறையில் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் காரியங்களை முடிப்பீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சிம்மம்: மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அழகு, இளமை கூடும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

கன்னி: பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும்.

துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரை எதிர்பாராமல் சந்திப்பீர்கள்.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்ப விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காகச் சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

கும்பம்: எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள்.

மீனம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றிகளைப் பெறுவீர்கள்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close