[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 03 Nov, 2018 07:37 am
  • அ+ அ-

மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அவர்களை இசை, நடனப் பயிற்சிக்கு அனுப்புவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: நீண்ட நாளாக எதிர்பார்த்த வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டினரால் ஆதாயம் எல்லாம் கிட்டும். காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

மிதுனம்: மறைமுக எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். உங்களின் தன்னடக்கத்தை அனைவரும் பாராட்டுவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.

சிம்மம்: மன உளைச்சல், டென்ஷன், சோர்வு வந்துபோகும். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. பிள்ளைகளின் உயர்கல்விக்கான செலவு எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும்.

கன்னி: யாரையும் யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

துலாம்: புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பண வரவு திருப்தி தரும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளையெல்லாம் இனி விரைந்து முடிப்பீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய இனிய சம்பவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். 

மகரம்: எளிதில் முடியும் வேலையைக் கூட பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள்.

கும்பம்: காரியத் தடைகள் விலகும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் பயணம் உண்டு

மீனம்: அரசு அதிகாரிகளின் துணையுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செலவை ஏற்படுத்தினாலும் புதிய அனுபவம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close