[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 02 Nov, 2018 09:01 am
  • அ+ அ-

மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். வேற்றுமதத்தவர் தக்க சமயத்தில் உதவுவார்.

ரிஷபம்:  வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பணப்பற்றாக்குறையைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

மிதுனம்: சேமிப்புகள் கணிசமாக உயரும். குடும்பத்தில் நிலவிய வீண் விவாதங்கள் விலகும்.  கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

கடகம்: வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சொந்த - பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

சிம்மம்: தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசுவதைக் கைவிடுங்கள்.

கன்னி: உறவினர், நண்பருடன் எதிர்பாராத வகையில் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் அநாவசியமாகப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

துலாம்: சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மற்றவர் களுக்காகச் சில வேலைகளை ஏற்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள்.

தனுசு: தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர்கள்.

மகரம்: முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. குடும்பத்தில் சிறு வார்த்தைகள்கூட பெரிய தகராறில் போய் முடியக் கூடும்.

கும்பம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close