[X] Close

இந்த வாரம் இப்படித்தான்; (துலாம் முதல் மீனம் வரை), (1.11.18 முதல் 7.11.18 வரை)


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 01 Nov, 2018 10:41 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சில் இனிமை, சாதுரியத்தால் காரியங்கள் எல்லாம் கைகூடும் பயணங்கள்  ஏற்படலாம். தொழில்,வியாபாரத்தில் கூடுதலாக வேலைச்சுமை இருக்கும்.உத்தியோகத்தில் கவனமாகச் செயல்படுவது நல்லது.குடும்பத்தில் அனுசரித்துச் செல்ல வேண்டும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பெண்களுக்கு, பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்தத் தடையையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு, ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்களது நன்மதிப்பைப் பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளிதிசைகள்: தென் கிழக்கு, வடக்கு நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் எண்கள்: 4, 5, 9 பரிகாரம்: கன்னி பெண்கள் 9 பேருக்கு தாம்பூலம், பூ, மஞ்சள் கொடுக்க வேண்டும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. பணவரத்து அதிகரிக்கும். தொழில்,வியாபாரத்தில் போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் நிலுவைப் பணம் வந்து சேரும். மேலதிகாரிகள் உதவி கிடைக்கும். நிலம்,வீட்டால் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு, புதிய நபர்களின் அறிமுகம், உதவி கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. கலைத் துறையினருக்கு, பணவரவு அதிகப்படும். பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியம் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு, பூர்வீகச் சொத்துக்களால் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாகப் பணியாற்ற வேண்டும். மாணவர்களுக்குள்போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்திசைகள்: தென்மேற்கு, மேற்கு நிறங்கள்: மஞ்சள்,சிவப்பு எண்கள்: 6, 9 பரிகாரம்: மாரியம்மனைத் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரவு இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்படும்.வாடிக்கையாளர்களிடம் சாந்தமாகப் பேசுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டும். குடும்பத்தினரின் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். மிகவும் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நன்மை தரும். பெண்களுக்கு, மற்றவர்கள் செயல்களால் திடீர்க் கோபம் உண்டாகலாம்.எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கலைத் துறையினருக்கு, உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு,கல்வியில் காணப்பட்ட மெத்தனப்போக்கு நீங்கி சுறுசுறுப்பாகப் பாடங்களைப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி திசைகள்: கிழக்கு, தென் மேற்கு நிறங்கள்:பச்சை, மஞ்சள் எண்கள்: 1, 3, 6   பரிகாரம்: குருவுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தேவையான உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். தொழில்,வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உத்தியோகத்தில் சின்ன விஷயத்துக்காகக்கூட அலைய வேண்டி இருக்கும்.பணிச்சுமை காரணமாகத் திடீர்க் கோபம் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் சரியாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பெண்களுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபடுவீர்கள். கலைத் துறையினருக்கு, எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடத்தில் உங்கள்மீது அலட்சியம் காண்பிப்பார்கள். மாணவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளிதிசைகள்: மேற்கு, வடக்கு நிறங்கள்: கரு நீலம், சிவப்பு எண்கள்: 5, 6  பரிகாரம்: சனிபகவான், விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்துச் செயல்பட்டவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். நீண்டநாள் கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர்ப் பிரச்சினைகள் ஏற்படலாம். கவனம் தேவை. குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.கலைத் துறையினர் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.அறிவுத்திறன் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் வளர்ச்சிக்காகச் சில திட்டங்களைச் செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். செயல்திறமை கூடும்.மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதற்குக் கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்திக் கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்துக்கு உதவும்.

 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளிதிசைகள்: கிழக்கு, தெற்கு நிறங்கள்: கரும் பச்சை,நீலம் எண்கள்: 6, 7, 9  பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும்.எதிர்ப்புகள் அகலும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை அகலும். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். அரசாங்க காரியங்கள் சாதகமாகப் பலன் தரும். உத்தியோகத்தில் செயல் திறமை மூலம் கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.திருமண முயற்சியில் ஈடுபடுபவர்களுக்குச் சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.பெண்களுக்கு, இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். கலைத் துறையினருக்கு, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களைச் செய்யுங்கள். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்துக்குப் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன் திசைகள்: வடக்கு, தெற்கு நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு எண்கள்: 2, 5, 6  பரிகாரம்: முருகனை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும்.கடன் பிரச்சினை தீரும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close