[X] Close

இந்த வாரம் இப்படித்தான் ; மேஷம் முதல் கன்னி வரை (1.11.18 முதல் 7.11.18 வரை)


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 01 Nov, 2018 10:34 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்து வேலைகளையும் திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியம், வாக்குவன்மைஅதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தை மாற்றும் எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தினருக்குத் தேவையான துணிகளை வாங்குவீர்கள். கணவன்,மனைவிக்குள் கருத்து வேற்றுமை குறையும்.பெண்களுக்கு, பணிகளை நிறைவுடன் செய்வீர்கள்.சாமர்த்தியமான பேச்சால் காரிய வெற்றி உண்டாகும்.கலைத் துறையினருக்கு, திடீர்க் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். அரசியல்வாதிகளுக்கு, கவனமாக இருப்பது நல்லது. செலவைக்  குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாடு குறையலாம். மாணவர்களுக்கு, கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்வீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் திசைகள்: கிழக்கு, தெற்கு நிறங்கள்: மஞ்சள், சிவப்பு எண்கள்: 1, 3, 9 பரிகாரம்: முருகனுக்குத் தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்திலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும். தொழில்,வியாபாரத்தில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். தந்தையார் உடல்நலத்தில் கவனம் தேவை.உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபங்கள் விலகும். பெண்களுக்கு யாருடனும் வாதம் வேண்டாம். கடும் முயற்சிகள் பலன் தரும்.கலைத் துறையினர் எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாகத் தப்பித்துவிடலாம். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். குலதெய்வப் பிரார்த்தனை உதவும். மாணவர்களுக்கு, படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி திசைகள்:மேற்கு, தென்கிழக்கு நிறங்கள்: சிவப்பு, வெள்ளை எண்கள்: 2, 5, 6 பரிகாரம்: மகாலட்சுமியைத் தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும்.மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் உண்டாகும். பிரிந்தநண்பர் மீண்டும் வந்து சேர்வார். தொழில்,வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும்.தொழில், வியாபாரத்தில் கூடுதல் முதலீடு செய்வதற்கு முன்னர் ஆலோசிக்க வேண்டும்.குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும்.பெண்களுக்கு, வீண் அலைச்சல் உண்டாகும்.மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் ஏற்படும். கலைத் துறையினருக்கு, உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே, கவனமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் ஈடுபட்டுக் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் திசைகள்: வடக்கு, கிழக்கு நிறங்கள்: பச்சை, வெள்ளை எண்கள்: 3, 5 பரிகாரம்: பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில்,வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும்.வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மேலிடம் அனுசரணையாக இருக்கும்.குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தலைதூக்கும். எனவே, சாதுரியமாகப் பேசி எதையும் சமாளிக்க வேண்டும். மெத்தனம் வேண்டாம்.பெண்களுக்கு, எந்தவொரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் வலிமை உண்டாகும். கலைத் துறையினரின் முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, உங்களைப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு,கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன் திசைகள்:தெற்கு, வடமேற்கு நிறங்கள்: வெண்மை எண்கள்: 4, 5, 6 பரிகாரம்: அங்காளம்மனைத் தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் ஏற்படும். எதிர்பாராத  சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர்ப் பயணங்கள் நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தைச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பெண்களுக்கு, இழுபறியாக இருந்த பிரச்சினைகளில் சாதகமான முடிவு வரும். கலைத் துறையினருக்கு, விடா முயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, புத்தித்தெளிவு ஏற்படும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாகப் படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன் திசைகள்:கிழக்கு, தென்மேற்கு நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு எண்கள்: 1, 9 பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனைத் தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் பிரச்சினை குறையும்.முன்னேறத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.மனத்தில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த நன்மையைத் தராவிட்டாலும்  உங்களது எண்ணப்படி எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். தொழில்,வியாபாரத்தில் தேவையான பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்.மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். பெண்களுக்கு, எண்ணப்படி காரியங்களைச் செய்து முடிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும். கலைத் துறையினருக்கு, எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனத்தில் சந்தோஷம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து  உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் இருக்கும் . மாணவர்களுக்கு, பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன் திசைகள்:வடமேற்கு, கிழக்கு நிறங்கள்: பச்சை, மஞ்சள் எண்கள்: 5, 6 பரிகாரம்: நவகிரகத்தில் புதனைத் தீபம் ஏற்றி வணங்கி வருவதும் புத்தி சாதுரியத்தைத் தரும்.சிக்கலான பிரச்சினைகளையும் எளிதாகத் தீர்ப்பீர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close