[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 31 Oct, 2018 05:39 am
  • அ+ அ-

மேஷம்: வீடு, மனை வாங்கும் எண்ணம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் மனக்கசப்புகள் வரக்கூடும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் வரும். 

ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் பெறுவீர்கள். தோல்வி பயம் நீங்கும். சகோதரி தக்க சமயத்தில் உதவுவார். பழைய கடனைப் பைசல் செய்வதற்கான வழி பிறக்கும்.

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பத்தை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். உடல்நலம் சீராகும். திடீர் பயணம் உண்டு

கடகம்: முன்கோபம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் இப்போது நினைவுக்கு வரும்.

சிம்மம்: பால்ய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் ஏற்படக்கூடும்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய பலம், பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். 

துலாம்: பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். வெளியிடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனைப் பைசல் செய்ய புது வழி பிறக்கும். குடும்பத்தில் நிலவிய கூச்சல், குழப்பம் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். 

தனுசு: வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்திக்கு மீறி உறுதிமொழியோ, உத்தரவாதமோ யாருக்கும் தர வேண்டாம். எதிர்பாராத கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். 

மகரம்: சமயோசிதப் புத்தியால் காரியங்களை சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள். யதார்த்தமாகப் பேசி எல்லோருடைய இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

கும்பம்: இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாகச் செயல்படும் வாய்ப்பிருக்கிறது. 

மீனம்: முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நெருங்கிய நண்பரை சந்தித்துப் பேசுவீர்கள். திடீர் பயணம் உண்டு.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close