[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 30 Oct, 2018 09:26 am
  • அ+ அ-

மேஷம்: வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். அதிரடியான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள்.
**
ரிஷபம்: புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். ஆன்மிக ஈடுபாடு கூடும்.
**
மிதுனம்: விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் இழுத்தடிப்பார்கள். வீண் பயணத்தால் அலைச்சல், செலவு ஏற்படும்.
**
கடகம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க நேரிடும். பழைய கடனைத் தீர்க்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம்.
**
சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
**
கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். காரியத்தில் நிதானம் தேவை.
**
துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறையால் சுமுகத் தீர்வு காண்பீர்கள். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பேச்சில் பொறுமை அவசியம்.
**
விருச்சிகம்: புதிய முயற்சிகள் சற்று தள்ளிப்போய் முடியும். உறவினர்கள், நண்பர்களின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
**
தனுசு: கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.
**
மகரம்: உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. பொருள் வரவு ஏற்படும்.
**
கும்பம்: உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும். சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். எதிலும் நிதானம் தேவை.
**
மீனம்: கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close