[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 29 Oct, 2018 08:58 am
  • அ+ அ-

மேஷம்: அரசு, வங்கி வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
**
ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வீண் செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
**
மிதுனம்: புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். எல்லாவற்றுக்கும் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
**
கடகம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்வீர்கள். உதவுவதுபோல வந்து சிலர் உபத்திரவம் தருவார்கள். வீண் பிரச்சினைகள் வந்து நீங்கும். காரியத்தில் பொறுமை தேவை.
**
சிம்மம்: பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து உறவாடுவார்கள். பணவரவு உயரும்.
**
கன்னி: பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் கூடும்.
**
துலாம்: குடும்பத்தில் அமைதி திரும்பும், சந்தோஷம் நிலைக்கும். வராது என்றிருந்த பணம் வரும். புதியவருடன் நட்பு மலரும். முக்கிய விஷயங்களில் திடீர் திருப்பம் ஏற்படும்
**
விருச்சிகம்: எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். சில வேலைகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
**
தனுசு: சகோதர வகையில் நன்மை உண்டு. திருமணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். பணவரவு, பொருள் வரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் ஏற்படும்.
**
மகரம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். பேச்சில் நிதானம் தேவை.
**
கும்பம்: புது பொறுப்புகள், வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
**
மீனம்: மறுக்கப்பட்ட உரிமைகள், சலுகைகள் திரும்பக் கிடைக்கும். கடின உழைப்பு வெற்றி தரும்.  பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close