[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 28 Oct, 2018 09:14 am
  • அ+ அ-

மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். 

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

கடகம்: கடின முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சொந்தபந்தங்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திப்பீர்கள் பிரபலமானவர்களின் நட்பால் ஆதாயம் கிடைக்கும். சுபச் செலவுகள் அடுத்தடுத்து வரும். 

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். 

துலாம்: யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தடைபட்ட திருமண ஏற்பாடுகள் வேகம் பெறும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். 

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலகியிருந்த சொந்தம்பந்தம் உங்களைத் தேடி வரும். உங்களது ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களின் நீண்டநாள் கனவு நினைவாகும். மின்சாதனம் வாங்குவீர்கள்.

கும்பம்: திட்டமிட்டக் காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மீனம்: சகோதரர் வகையில் நன்மை உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close