[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 27 Oct, 2018 09:25 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். செலவைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவத்தை யாரிடமும் விவாதிக்காதீர்கள். குடும்பத்தினர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகத்தால் நல்லவரை இழப்பீர்கள்.

மிதுனம்: காரியங்களை போராடி வெல்வீர்கள். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். திடீர் பயணங்கள் உண்டு.

கடகம்: நீண்டநாள் ஆசைகள் ஒவ்வொன்றாய் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும்.

சிம்மம்: உங்களது ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கடன் தொகை வசூலாகும். எதையும் உற்சாகத்துடன் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

துலாம்: வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். சிலரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம்.

விருச்சிகம்: தன்னம்பிக்கை பிறக்கும். உங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும்.

தனுசு: தொட்டக் காரியங்கள் துலங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மகரம்: பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.  நவீன மின்னணு சாதனம் வாங்குவீர்கள். செலவைக் குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும்.

கும்பம்: எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.

மீனம்: கம்பீரமாகப் பேசி காரியங்களைச் சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close