[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 26 Oct, 2018 09:05 am
  • அ+ அ-

மேஷம்: அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். காரியங்களைப் போராடி முடிப்பீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். அடுத்தவரைக் குறைகூறுவதை நிறுத்துங்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். 

கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். உறவினரால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு.

கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். 

துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பீர்கள். பிரார்த்தனைகளைக் குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும்.

மகரம்: அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காகச் சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கும்பம்: திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதிப் பெருகும். சொத்துப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினைகளுக்குச் சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடிவருவார்கள்.

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close