[X] Close

இந்த வாரம் இப்படித்தான் ; துலாம் முதல் மீனம் வரை


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 25 Oct, 2018 10:00 am
  • அ+ அ-

 (25.10.18 முதல் 31.10.18 வரை)

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராசியாக இருக்க எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து விஷயங்களில் சுணக்க நிலை மாறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடச் சற்று நிதானமாகவே நடக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான சூழல் உண்டு. உத்தியோகத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். மேலிடத்திலிருந்து அழுத்தம் அகலும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். உறவினர்களின் வருகை இருக்கும். பெண்களுக்கு, மனக்குழப்பம் நீங்கும். கலைத் துறையினருக்கு வீடு, நிலம், வாகனங்கள் சேரும். அரசியல்வாதிகள் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்துக்குத் தேவையான பணம் வந்து குவியும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி l திசைகள்: மேற்கு, தென்மேற்கு l நிறங்கள்: வெள்ளை l எண்கள்: 6, 9 l பரிகாரம்: லட்சுமியை வெள்ளிக்கிழமையில் பூஜித்து வர பொருள் வரவு கூடும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் சுகஸ்தானத்திற்கு மாறுகிறார். ஆற்றல் அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும். தொழில், வியாபாரத்தில் பேச்சில் இனிமை, புத்திசாலித்தனத்தால் முன்னேற்றம் பெறுவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளைப் பேச்சால் கவரலாம். எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். உறவினர்களால் உதவி கிடைக்கும். வழக்குகளைத் தள்ளிப்போடாமல் நடவடிக்கைகளில் இறங்குவது நல்லது. பெண்களுக்கு, எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசியல்வாதிகளுக்கு, அலைச்சல் இருக்கும். மாணவர்களுக்கு, மற்றவர்களின் யோசனைகளைச் செயல்படுத்தும்போது கவனம் தேவை.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன் l திசைகள்: கிழக்கு, வடகிழக்கு l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் l எண்கள்: 3, 9 l பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். எதிலும் கூடுதல் சிரத்தையுடன் இருப்பது நல்லது. பணவரவு மேம்படும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் சில காரியங்கள் பதற்றத்தைக் கொடுப்பதாக இருப்பினும் நல்லபடியாக முடியும். மேலதிகாரிகள் ஆதரவு இருக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். பெண்களுக்கு, முட்டுக்கட்டைகள் நீங்கும். கலைத் துறையினருக்கு, அன்பும் பாசமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தாங்கள் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். மாணவர்களுக்கு, விரும்பியதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் l திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு l நிறங்கள்: ஆரஞ்சு, மஞ்சள் l எண்கள்: 1, 3, 9 l பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்ய அமைதி உண்டாகும்.


மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்த செவ்வாய் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். சொத்து, வீடு வாங்குவதற்கான தடைகள் நீங்கும். தொழில், வியாபாரம் வேகமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். மேலிடம் ஆதரவாக இருக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் இருக்கும். வாழ்க்கைத் துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு, தடைபட்டு வந்த காரியத்தைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, எல்லா நன்மைகளும் தங்குதடையின்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பது பற்றிய கவலை நீங்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி l திசைகள்: தெற்கு, தென்கிழக்கு l நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் l எண்கள்: 3, 5, 6 l பரிகாரம்: திங்கள்கிழமை விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி வர கடன் தொல்லை குறையும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் சகோதரர்கள் வகையில் மனத்தாங்கல் மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சினைகளில் இழுபறியான நிலை காணப்படும். பஞ்சம அஷ்டமாதிபதி புதன் சஞ்சாரம் மனத்தெம்பும் மகிழ்ச்சியும் தரும். போட்டிகளைச் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில், வீண் அலைச்சலைச் சந்திக்க நேரிடும். மேலிடம் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். சுபகாரியத்துக்கான தடைகள் அகலும். பெண்களுக்கு, தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். கலைத் துறையினர், ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அரசியல்வாதிகள், மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பது பற்றிய கவலை நீங்கும். உற்சாகமான மனநிலை காணப்படும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி l திசைகள்: மேற்கு, தென்மேற்கு l நிறங்கள்: நீலம், மஞ்சள் l எண்கள்: 2, 3, 6 l பரிகாரம்: வியாழக்கிழமை ஆஞ்சனேயருக்குத் துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்குச் சாதகமான பலன் உண்டு. புதிய சொத்துச் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். முடங்கிக் கிடந்த திட்டங்கள் வேகம்பிடிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவான நிலையை எடுப்பார்கள். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு, நிதானமாகப் பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். கலைத் துறையினருக்கு, பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். மாணவர்களுக்கு, விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் l திசைகள்: வடக்கு, வடகிழக்கு l நிறங்கள்: வெள்ளை, சிவப்பு l எண்கள்: 1, 3, 9 l பரிகாரம்: அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close