[X] Close

இந்த வாரம் இப்படித்தான்; மேஷம் முதல் கன்னி வரை (25.10.18 முதல் 31.10.18 வரை)


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 25 Oct, 2018 09:53 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்துக்கு மாறுகிறார். இதனால் பல நல்ல பலன்களைப் பெறலாம். மனத்தில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முயற்சியெடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்திசாதுரியத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். நீண்ட நாட்களாக இழுத்து வந்த காரியங்கள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு, முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு, ஒப்பந்தங்களை ஆராய்ந்து கையெழுத்திட வேண்டும். கலைத் துறையினருக்கு, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் l திசைகள்: கிழக்கு, தெற்கு l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் எண்கள்: 1, 3, 9 l பரிகாரம்: முருகனுக்கு அர்ச்சனை செய்ய கஷ்டங்கள் நீங்கி மன அமைதி உண்டாகும்.


ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் மறைந்திருந்தாலும் குரு பார்வையால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு இருக்கும். மாற்றம் பெறும் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் எதிர்ப்புகள் விலகும். புதிய உற்சாகமும் தைரியமும் உண்டாகும். தொழில் ஸ்தானத்துக்கு செவ்வாய் மாறுகிறார். தொழில், வியாரத்தில் போட்டிகள் குறையும். புதிய வர்த்தக ஆர்டர்களுக்காகத் திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். அலுவலகம் தொடர்பாகப் பயணம் செல்லலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு மாறும். பெண்களுக்கு உற்சாகம் உண்டாகும். கலைத் துறையினருக்கு, புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் நம்பிக்கை அதிகரிக்கும். 

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி திசைகள்: தெற்கு, தென்மேற்கு நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 3, 6 பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெண்மொச்சைச் சுண்டல் விநியோகம் செய்ய வேண்டும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். தொழில், வியாபாரத்தில் முன்பு இருந்ததைவிட முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சாமர்த்தியமான பேச்சால் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். மேலிடத்தின் ஆதரவு, அனுசரணை கிடைக்கும். உறவினர் வருகை இருக்கும். வீண் பேச்சுக்களைக் குறைப்பதால் அமைதி ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு, சாதுரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவீர்கள். கலைத் துறையினருக்கு, தொழிலில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் கட்டுப்பாடு அவசியம். அரசியல்வாதிகளுக்கு, விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் அடையப் பாடுபடுவீர்கள். கல்விப் பயணம் செல்ல நேரிடலாம்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன் l திசைகள்: மேற்கு, வடமேற்கு l நிறங்கள்: பச்சை, நீலம் l எண்கள்: 3, 5 l பரிகாரம்: பெருமாளுக்கு மருக்கொழுந்து சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சற்றுக் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வீண் பிரச்சினைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. புதிய வர்த்தக ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிதானமாகச் செயல்பட்டுப் பிறரிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்த பிணக்குகள் மறையும். வாழ்க்கைத் துணைக்காகச் செலவு செய்ய நேரிடும். பெண்களுக்கு, பிறருக்கு உதவும்போது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, கடந்த காலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். மாணவர்களுக்கு, பாடங்களை மிகவும் நிதானமாகப் படித்து மனத்தில் பதிய வைத்துக் கொள்வது நல்லது. 

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன் l திசைகள்: வடக்கு, வடகிழக்கு l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 2, 3 l பரிகாரம்: பராசக்திக்கு வேப்பிலை அர்ப்பணித்து வழிபட்டு வருவது காரியத் தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்தில் பலம் குன்றிக் காணப்பட்டாலும் அவரின் பாதசார சஞ்சாரத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தித் தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்த்து செயல்படுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கலாம். சிலர் செல்வாக்கான பதவி கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் திடீர் சுபச்செலவு ஏற்படும். பெண்களுக்கு, சேமிப்புகள் அதிகரிக்கும். கலைத் துறையினர், பணப் பற்றாக்குறையைச் சந்திக்கலாம். அரசியல்வாதிகளுக்கு, எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறக் கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாகப் பேசிப் பழகுவது நன்மை தரும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் l திசைகள்: கிழக்கு, வடகிழக்கு l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் l எண்கள்: 1, 3, 6, 9 l பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் தொய்வு நிலை நீங்கும். தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாகச் செய்து வெற்றிபெறுவீர்கள். அரசாங்கரீதியிலான உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் விறுவிறுப்படையும். மந்த நிலை அடியோடு மாறும். முயற்சிகள் வெற்றிபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சொல்படி நடந்துகொள்வது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். மேலிடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்துச் செய்ய வேண்டும். பெண்களுக்கு, தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, சஞ்சலம் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, நிலவிவந்த பிரச்சினைகள் மறையும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன் l திசைகள்: தெற்கு, தென்கிழக்கு l நிறங்கள்: பச்சை, ப்ரவுன் l எண்கள்: 5, 9 l பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்துப் பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.


 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close