[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 25 Oct, 2018 09:22 am
  • அ+ அ-

மேஷம்: கணவன் - மனைவி இடையே சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பம் ஏற்படும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லும் கருத்துகூட சீரியசாகும்.

ரிஷபம்: விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வேலைச்சுமை குறையும். பண வரவு உண்டு.

கடகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொந்தரவுகள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும்.

சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். 

கன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் மனம் நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்திருந்த பணம் தாமதமாக கைக்கு வரும்.

துலாம்:  சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். நவீன ரக ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வைப் பாராட்டுவீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலை தடையின்றி முடியும்.

தனுசு:  மனைவிவழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க முயலுங்கள். நட்பு வட்டாரம் விரியும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். 

மகரம்: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணம் வரும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் பண உதவி கிடைக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும்.

மீனம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அரசு காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close