[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 24 Oct, 2018 09:18 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தாருடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்: வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகள் தலைதூக்கும்.

மிதுனம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். திடீர் பயணம் உண்டு.

கடகம்: எதிரிகளின் சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடிவருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்: அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உதவுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

கன்னி: அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் குறைகூறிக் கொண்டிருக்காதீர்கள். யாரையும், யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.

துலாம்: பழைய இனிய சம்பவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன்  - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு, வாகனச் செலவுகள் நீங்கும்.

விருச்சிகம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. நவீன கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

தனுசு: சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். பிரபலமானவர்களின் நட்பு கிட்டும்.

மகரம்: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பால்ய  நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

மீனம்: அழகு, இளமை கூடும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய மனக்கசப்பு நீங்கி ஒருவரையொருவர் புரிந்து கொள்வீர்கள்.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close