[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 23 Oct, 2018 09:38 am
  • அ+ அ-

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். திடீர் பயணம் ஏற்படலாம்.

ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். கடனைப் பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மிதுனம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். விருந்தினர் வருகை உண்டு.

சிம்மம்: எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலவற்றுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

கன்னி: மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு தாயார் ஆதரவாக இருப்பார். சொத்துப் பிரச்சினையில் இருந்துவந்த சிக்கல்களில் ஒன்று தீரும்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. திடீர் பயணம் உண்டு.

தனுசு: பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் எதிர்பாராத வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.

மகரம்: நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். இழுபறியாக இருந்த பிரச்சினைகளுக்கு முக்கியத் தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு.

கும்பம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மீனம்: முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close