[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 08:15 am
  • அ+ அ-

மேஷம்: திடீர் பயணத்தால் அலைச்சல், அசதி உண்டாகும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்கள் அலைச்சலுக்குப் பிறகு முடியும்.
**
ரிஷபம்: மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அக்கம் பக்கத்தில் சுமுகமான நிலை காணப்படும்.
**
மிதுனம்: நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அரசு அதிகாரிகளின் ஆலோசனைபடி சொத்துப் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். பேச்சில் நிதானம் தேவை.
**
கடகம்: தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் நிறைவடையும். விஐபிக்களின் ஆதரவு கிடைக்கும். தம்பதியர் இடையே காணப்பட்ட பிணக்குகள் நீங்கும்.
**
சிம்மம்: வீண் அலைச்சல், பணத் தட்டுப்பாடு ஏற்படும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
**
கன்னி: பால்ய சினேகிதர்களால் திடீர் திருப்பம் ஏற்படும். செலவைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
**
துலாம்: பிரபலங்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் உங்களை புரிந்துகொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.
**
விருச்சிகம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கும். முக்கிய நபரால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
**
தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பால்ய சினேகிதர்கள் தேடி வருவார்கள். அண்டை அயலாருடன் அளவாகப் பேசுங்கள்.
**
மகரம்: மனதில் நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக் கசப்புகள் நீங்கும்.
**
கும்பம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நட்பு வட்டாரம் விரிவடையும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.
**
மீனம்: எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close