[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 09:12 am
  • அ+ அ-

மேஷம்: குறிக்கோள்களை நிறைவேற்றப் போராடுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களைத் தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: பிரபலமானவர்களுடன் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும்.

கடகம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள்.

சிம்மம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கன்னி: பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்கில் தீர்வு கிடைக்கும்.

துலாம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். 

விருச்சிகம்: புது எண்ணங்கள் தோன்றும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.

தனுசு: எதிர்பாராத செலவுகள் வந்தாலும், எதிர்பார்த்த இடத்திலிருந்து வரும் பணத்தால் சமாளிப்பீர்கள். பேச்சுத் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடிப்பீர்கள். சிலவற்றுக்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவு வேண்டாம்..

மீனம்: எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு பார்ப்பீர்கள். உறவினரால் செலவு அதிகரிக்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த உதவி தாமதமாகக் கிடைக்கும்.

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close